Header Ads



அமெரிக்காவில் அதிசயம் ஒரே மரத்தில் 40 வகை பழங்கள்


அமெரிக்காவில்  ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அசத்தி இருக்கிறார் சாம் வான் அகேன் என்ற தாவரவியல் விஞ்ஞானி.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது நம்மூர் பழமொழி. ஆனால் இனிமேல் அப்படி கூற முடியாது. அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலை கழகத்தின் பேராசிரியர் சாம் வான் அகேன் தான் அதற்கு காரணம். இவர் வளர்க்கும் மரத்தில் ஒரே கல்லில் பிளம்ஸ், செர்ரி என பல பழங்கள் விழும்.இவருடைய ஆராய்ச்சி ஒன்றும் புதிதல்ல. என்ற போதும் கொஞ்சம் முயற்சியையும், உழைப்பையும் கோருவது. நம்மூரில் மாம்பழங்களை சுவை மிக்கதாக மாற்றுவதற்கு ‘ஒட்டு மாங்கனி’ என்ற முறை பயன்படுத்தப்படுவதுண்டு. அதில் புளிப்பான மரத்தின் தண்டில், சுவையான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாகவும், அதிகமாகவும் காய்க்க செய்வர். 

அதே போன்றுதான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்துள்ளார். தற்போது இவர் வளர்த்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. மட்டுமின்றி பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் மிகவும் அழகிய தோற்றத்தை உடையதாகவும் உள்ளது. இதுகுறித்து சாம் வான் அகேன் கூறுகையில்,என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக, அம்மரத்தை குளிர்காலத்தில் பார்ப்பவர்களுக்கு செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை என வானவில்லை போல் காட்சியளிக்கிறது.கோடை காலத்தில் அம்மரம் பல்சுவை கொண்ட பழங்களை வழங்குகிறது. மேலும், இதுபோன்ற வகையில் தாவர ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வேன் என்று சாம் வான் அகேன் பெருமையுடன் கூறுகிறார்.

No comments

Powered by Blogger.