Header Ads



நாட்டிற்குள் புதிய தோற்றத்தில் முஸ்லிம் அடிப்படைவாதம்

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் புதிய தோற்றத்தில் முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டிற்குள் செயற்பட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் அரசாங்கத்தை பிரச்சினைக்குள் தள்ளிவிடும் இரண்டு சக்திகள் செயற்பட்டு வருகின்றன. இதில் ஒன்று நண்பன் எனும் முகமூடியை அணிந்த எதிரான சக்தி.

மற்றைய சக்தி அரசாங்கத்தை பிரச்சினைக்குள் தள்ளும் அமைச்சர். அவர் அரசாங்கத்தின் காணிகளை கொள்ளையிடுகிறார்.

புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்ட பின்னர், புதிய தோற்றத்தில் முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டிற்குள் செயற்பட்டு வருகிறது.

அரசாங்கத்தை பிரச்சினைக்குள் தள்ளும் மற்றுமொரு நட்பு சக்தி, அண்மையில் துறைமுகம் மற்றும் விமான நிலைய பகுதிகளில் நடந்த சம்பவங்கள் மூலம் நன்றாக புலப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சக்திகளும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கு நண்பர்களாக இருப்பதாக காட்டிக்கொண்டு எதிராக செயற்பட்டு வருகின்றன.

இவர்கள் செய்யும் கெடுதிகளால், அரசாங்கத்திற்கோ, நாட்டுக்கோ, மக்களுக்கோ புதிதாக வெளியில் இருந்து எதிரிகள் தேவையில்லை என்றும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அடிப்படை வாதம் என்றால் என்னவென்று தெறியாத காவிதீவிரவாதிகள் கூவ்வுகிறது.இலங்கையின் வலர்சிக்கும், அரசியலுக்கும் அச்சுருத்டல் ஏற்படுத்தும் காவிகளின் உள்சூற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.250 ஆண்டுகலுக்கு முன்பு இலங்கை வரலாராறை புரட்டி பார்க்க வேண்டிய நேரம் இது ஏ சீ எம்.கடஃபி, தோஹா கத்தார்

    ReplyDelete

Powered by Blogger.