Header Ads



பொதுபல சேனாவை கண்டித்து - இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்..!

ஆயிரமாயிரம் வருடகால பூர்வீக வரலாறு கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாத வெறுப்பினையும் மத அசௌகரியங்களையும் தொடர்ந்தும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற தீவிரவாத பிக்குள் அமைப்பான பொதுபல சேனாவினையும் அதனுடைய பிரதான பிக்குவான ஞானசார தேரரையும் கண்டித்து எம்முடைய ளுடுஆனுஐ ருமு அமைப்பானது மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை லண்டன் மாநகரில் ஏற்பாடு செய்துள்ளது.

மிகவும் உறுதியான அரசியல் இருப்புடனும் பாரம்பரிய அடையாளங்களுடனும் வரலாறு நெடுக இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பல்வேறு விதங்களிலும் அத்துமீறுகின்ற விதமாக பொதுபலாசேனா என்கின்ற பயங்கரவாத பிக்குகள் அமைப்பும் அதன் தலைமைப் பிக்குவான ஞானசார தேரரும் தம்முடைய அடாவடித்தனங்களைப் பகிரங்கமாக முன்னெடுத்து வருவது ஒரு Nபுhதுமே ஏற்றுக்கொள்ள முடியாதது.

01. முஸ்லிம்களின் அடிப்படை மத வழிபாட்டு உரிமைகளைத் துவம்சம் செய்யும் விதமான எதிர்ப்புப் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை
02. முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மத அனுட்டானங்களான ஹலால் உணவு முதலான பண்பாடுகளைக் கொச்சைப்படுத்துகின்றமை
03. முஸ்லிம் குடியேற்றங்களையும் பள்ளிவாயல்களையும் அழித்து இல்லாமலாக்கும் அடாவடித்தனங்களை நேரடியாக அரச பாதுகாப்புடன் ஈடுபடுகின்றமை
04. முஸ்லிம்களின் பொருளாதாரத்தைக் குறிவைத்து பொய்ப்பிரச்சாரங்களையும் அழிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றமை. 

என நீண்டுகொண்டே போகின்ற இவர்களின் அத்துமீறல்களின் பட்டியலானது முஸ்லிம்களை மட்டுமன்றி ஏனைய இன சகோதரர்களையும் கடும் கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

தேசிய ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்கமாக அரச பாதுகாப்புப் படைகளின் துணையுடன் அரங்கேறும் இந்த வன்முறை நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்கவோ சட்டத்தின் முன் நிறுத்தவோ நாதியின்றி வாய் மௌனித்த அரசியல் தலைமைகளுடன் முஸ்லிம் சமூகம் இன்று நடுத்தெருவில் அரசியல் அநாதைகளாக நின்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் புலம்பெர்ந்து வாழுகின்ற இலங்கை முஸ்லிம்களாகிய நாம் நம்முடை பரந்த அரசியல் அழுத்தங்களினூடாகத் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும் நடந்தவற்றுக்கான முறையான நீதியைப் பெற்றுத்தரும் அழுத்தங்களை பரந்தளவில் முன்னெடுக்கவும் மிகவும் ஒழுங்குபட்டு இயங்க வேண்டியிருக்கிறது. 

அதற்காக நமது எந்தவித அரசியல் கருத்து வேறுபாடுகளையும் கடந்து மொத்தமாக புலம்பெயர் இலங்கை முஸ்லிம் சமூகம் என்கின்ற ஒரே அடையாளத்துடன் ஒன்று சே;ந்து நமது குரல்களைப் பலமாக ஒலிக்கச் செய்வது நம் ஒவ்வொருத்தருக்கும் கடமையாக இருக்கிறது. 

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது பொதுபலசேனா என்கின்ற இந்தப் பயங்கரவாத பிக்குகளின் அமைப்பினதும் அதன் தலைமைப் பிக்குவான ஞானசர தேரரைரினதும் இனவாத அத்துமீறல்களை வன்மையாகக் கண்டிக்கின்றதாகவும், இவர்களை இத்துடனாவது தடுத்து நிறுத்தி சட்டத்தின் முன்னால் சமர்ப்பிக்கவும் இலங்கையின் அதிகாரத் தரப்புக்கு அழுத்தம் கொடுக்கவுமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கீழ்வரும் ஒழுங்கில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குகொண்டு நம்முடைய குரல்களை ஒரு வலுவான அரசியல் சக்தியாகத் திரட்டியெடுத்து நம்முடைய சமூகத்தின் இந்த அவல நிலைக்கான ஒரு பெரும் துணையாக மாற்றுவதற்கு நாம் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 

காலம் 05th May 2014 (Monday)

இடம்  13, Hyde Park Gardens, London. W2 2LU. United Kingdom. 
(In front of The Office of Srilankan High Commission to United Kingdom)

நேரம் : 12:00 PM to 16:00 PM

பொறுப்புடன் 
ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு ஐக்கிய ராச்சியம்
14, Loveletts, Gossops Green, Crawley, West Sussex, RH11 8EG, United Kingdom
Tel/Fax: +44 1293 415 145, Mobile: +44 795 026 1775, E-mail: slmdi.uk@gmail.com, Web: www.slmdi.org.uk

3 comments:

  1. Insha Allah it is good move,

    Burt Remember to remind all participant, in any way (by writings, drawing, speech) not to insult other religious belief (as directed by our prophet), further majority of SriLankan Sinhalee community are not with BBS.. therefore remember to RESPECT them and their culture.
    Only point your goals to the TARGET,
    Do not play any action that can increase numbers to them.

    We need a peaceful Srilanka with every ethnic community live respecting each other.
    Muhammed from KSA

    ReplyDelete
  2. good job please go head .....world must know about this buddhist terrorism....

    ReplyDelete
  3. Appropriate action to work for SL Muslims dignity, filling leadership gap and unite SL Muslim expatriate communities in the Globe against on going hate moves and discrimination on our people. I wish success.

    ReplyDelete

Powered by Blogger.