Header Ads



வாழைச்சேனையில் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பது தொடர்பாக பள்ளிவாசலில் கூட்டம்


(நஷ்ஹத் அனா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நடைபெறும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பது தொடர்பாக இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கூட்டம் திங்கள்கிழமை (08.07.2013) இரவு பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம் பெற்றது.

பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் எம்.பதுர்தீன் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் சித்தாண்டி இராணுவ முகாம் கட்டளை அதிகாரி மேஜர் ஹரிசேன, வாழைச்சேனை துறைமுக இராணுவ முகாம் பொறுப்பதிகாரி எல்.ரீ.தனபால, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவிர, பிரதேச சிவில் பாதுகாப்பு பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவது என்றும் இதற்கு பிரதேசத்தில் இருக்கும் அனைவரது ஒத்துழைப்பும் கட்டாயம் தேவை என்றும் அப்போதுதூன் இக் குற்றச் செயல்களைக் குறைக்க முடியும் என்றும் பொலிஸாரினதும் இராணுவத்தினரதும் ஒத்துழைப்பால் மாத்திரம் குற்றச் செயல்களை ஒழிக்க முடியாது என்றும் பொது மக்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் குற்றச் செயல்களை ஒழிக்க முடியும் என்று  வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.