Header Ads



பொதுபல சேனாவும், கோத்தபாய ராஜபக்ஷவும்


(இம்தியாஸ் யூசுப் ஸலபி)

பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்களை குறிவைத்து நசுக்குவதற்காக உருவான அமைப்பு என்பது தெளிவான விடயம். தற்போது நாட்டில் அமைதியை சீர்குலைத்து பயத்தை உண்டுபண்ணி, சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வெறுப்புக்குள்ளாக்கி வருகிறார்கள். 

இவர்களுடைய ஒவ்வொரு அசைவும் நாகரிகமற்ற போக்காகவே காணப்படுகிறது. குறுகிய காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் கூட்டங்களை நடத்தி, முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற பாணி யினையே செய்து வருகிறார்கள். இவர்களுடைய பேச்சும் மனிதத் தன்மைக்கு மாறானதாகும். இஸ்லாமிய கலாச்சாரங்களை புண்படுத்துவதில் குறியாக இருக்கிறார்கள். 

பௌத்த மதத்தினை பின்பற்றும் நடு நிலைமை வாதிகளான படித்தவர்களை, அமைச்சர்கள் மற்றும் பிக்குமார்கள் இவர்களுடைய இப்போக்கை கடுமையாக எதிர் க்கிறார்கள். பௌத்த தர்மத்திற்கு எதிரான போக்கு என்றும் கண்டிக்கிறார்கள்.

ஆனால், இந்த பொதுபலசேனா மற்றும் அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள இனவாத அமைப்புகள் சட்டத்திற்கு எதிராகவும் சமதானத்திற்கு எதிராகவும் பகிரங்கமாக பேசவும் நடக்கவும் செய்கிறார்கள் என் றால், இதன் பின்னணி என்ன என்பது சிந்திக்க வேண்டும். 

நிச்சயமாக இவர்களுக்கு பின்புலமாக இருந்து உதவிகள் ஒத்தாசைகள் வழங்குவது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிடுகிறார். இதனை திரு. கோத்தபாய மறுத்ததாக காண முடியவில்லை. மாறாக இதனை உண்மைப்படுத்தும் விதமாகவே அவரும் நடந்து வருகிறார். 

- பொலிஸாரை அடிப்பது
- அதிகாரிகளை தாக்குவது
- ஊர்வலத்தின்போது பொலிஸாருடன் முட்டி மோதிச் செல்வது
- கடுமையான தீய வார்த்தைகளால் பொலிஸ் அதிகாரிகைளைத் திட்டுவது 

என பல சம்பவங்களை இந்த இன வாதப் பிக்குகளால் நடந்தும் கூட சட்ட ரீதியான எந்த நடவடிக்கையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை. இது நாட்டு மக்க ளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாகும்.

அரசாங்கத்திற்கெதிரான ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்றதும் உடனே அதனை கையாள்வதில் அரசு துரித நடவடிக்கைளை மேற்கொள்கிறது.பொலிஸரின் மீது கைவைத்தாலோ அல்லது அவர்களை பிடித்தாலோ உடனடி நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால்சட்டத்திறகு முற்றிலும் முரணாக போகும் போது அவர்களுக்கு முன் தலைவணங்கி கையைக்கட்டி பொலிஸார் நிற்பது மிகப்பெரும் அனியாயமாகும்.

காவிஆடைக்கு முன் சட்டம் சரணடையுமாக இருந்தால் நாடு பாதாளத்தை நோக்கி போவதை தவிர வேறில்லை.

இந்த காவி பயங்கரவாதிகள் நடப்பது போன்று ஏனையவர்கள் – மதத்தலைவர்கள் ஏனைய சமூகத்தினர்கள் நடந்தால் பொலிஸாரோ அல்லது சட்டமோ அவர்களுக்கு முன் மண்டியிடுமா மண்டையை உடைக்குமா? 

தான் ஊட்டி வளர்த்த பிள்ளை என்பதற்காகவா அரசு அவர்களுக்கு இத்தனை சலுகைகளையும் வழங்குகிறது.?

பொதுபல சேனா காரியாலயத்திற்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடாத்தும் போது பொலிஸார் கூட்டத்தை கலைத்துவிடுகின்றனர்.ஆனால் முஸ்லிம்களுக்கெதிராக பாரிய பொது பலசேனா எதிர்ப்பு கூட்டங்கள் நடாத்தும் போதோ இனவாத அமைப்புக்கள் தாக்குதல் தொடுக்கும் போதோ பொலியஸார் கையை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது எப்படி நியாயமாகும்?

கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் காலியில் அமைந்துள்ள பொது பல சேனா வின் காரியலயமொன்றை திறந்து வைப்ப தற்காகச் சென்ற நிகழ்வையிட்டு முஸ்லிம் கள் அச்சப்பட்டனர். 

இக்காரியாலயத்தை திறந்து வைத்து  கோத்தபாய ராஜபக்ஷ ஆற்றிய உரை யில், 'இங்கு நான் வருகை தருவதையிட்டு சிலர் பயப்படுகிறார்கள். அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. அமைதியாகப் பேசினால் புரியாது. கொஞ்சம் கடுமையாகப் பேச வேண்டும் என எமது (பொதுபல  சேனா) தலைமை குரு (தேரர்) குறிப்பிட்டார். அனுபவபூர்வமாக அது பற்றி எனக்கும் தெரியும். 

சிற்சில பதவி காரணமாக நீங்கள் பயப்படுகிறீர்கள். நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. தேரர்கள் அஞ்ச வேண்டியதில்லை. எவரும் அச்சுறுத்தலுக்கு அஞ்ச வேண்டியதில்லை. அவ்வச்சத்தை இல்லாதொழிக்க வேண்டும்.' 

இவ்வார்த்தைகளை பலமுறை சிந்திக்க வேண்டியதாகும். இந்நாட்டின் பூர்வீக மக்களான (சிறுபான்மை சமூகமான) பொதுபல சேனா சிஹல உறுமய மற்றும் சிஹல ராவய போன்ற இனவாத அமைப்புகளால் முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் வேளையில், கோத்தபாய ராஜபக்ஷவின் இவ்வுரை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுபல சோனவின் தேரர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அபாண்டங்களைச் சுமத்தி, கடுமையான வார்த்தை பிரயோகங்களால் தூசித்து வரும் போது அவ்வாறு பேசுவது சரிதான் என்பதுபோல்  கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பேசுவது நியாயமானதல்ல. அதுமட்டுமன்றி தானும் ஜனாதிபதியும் இந்த அமைப்பின் குருமார்களிடம் ஆசிர்வாதம் பெறுவதாகவும் பகிரங்கமாக கூறி முஸ்லிம்களை புன்படுத்துவதும் நல்லதல்ல. இது அதிகார வெறியுடனான பேச்சு என்பதா அல்லது தானும் இனவாதி என்று முஸ்லிம்களை பயமுறுத்துவதா?

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அவர்கள் நாட்டின் சகல இன மக்களுக் குரியவராவார். உயர் பதவியில் இருப்பவர் இப்படிப் பேசுவது சிறுபான்மை மக்களின் நிகழ்கால, எதிர்கால வாழ்வில் பாரிய சந்தேகத்தையும் விரிசலையும் உண்டு பண் ணுவதாக அமையும். அதுமட்டுமன்றி, இனவாத அமைப்புகளுக்கு அரசு அனுசரணை வழங்குவதாகவே இது இருக்கும். துரதிஷ்டவச மாக இனவாத அமைப்பின்| பாதுகாவளராக அவருடைய செயற்பாடு ஆக்கப்பட் டுள்ளது என்பது வெளிப்படையாக தென்படுகிறது.

பொதுபல சேனாவின் மெத்சேவன| என்றும் இக்காரியலய திறப்பு விழாவுக்கு  கோத்தபாய போவது பற்றி பயப்பட்டது. முஸ்லிம்கள்தான்! இதனைத்தான் அவர் தனது உரையிலும் சிலர் பயப்படுகிறார்| என்று குறிப்பிட்டார். பொதுபல சேனாவுக்கு தைரியமூட்டி முஸ்லிம்களை அச்சமடைய வைத்துள்ளார் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள். 

பொதுபல சேனா கண்டியில் நடத்திய கூட்டத்தில் (17.03.2013) அதன் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிடும்போது எம் முடன்  கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இருக்கிறார் என்று கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் ஞானசார தேரர் முஸ்லிம்களை கீழ்த்தரமாக விமர்சித்தார் என்பதை யாவரும் அறிவோம். 

எனவே, அரசை இனவாதமாகவோ மதவாதமாகவோ மாற்றிடவும் கூடாது. ஆதரவு தெரிவிக்கவும் கூடாது. அனைத்து இன மக்களுக்குரிய அரசாகவே இருந்திட வேண்டும். இந்நாட்டுக்கும், நடைபெற்ற யுத்தத்திற்கும் முஸ்லிம்கள் செய்த தியாகங் களை அரசு மறந்து விடக்கூடாது. 

30 வருட கால யுத்தத்தினால் ஏற்பட்ட ரணங்கள் இன்னும் மறையாத நிலையிலும் மறக்ககூடாத நிலையில் இன்வாத மதவாத இமைப்புக்களை வளரவிடுவது நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பாரிய வீழச்சியாகவும் பின்னடைவுக்கான வழியாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

எல்லா சமூகமும் பரஸ்பர அன்புடன் சமாதானத்துடன் சகவாழ்வை மேற்கொள்ள அரசு உழைக்க வேண்டும். இதுவே நாட்டின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் அனு கூலமாக அமையும் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.


No comments

Powered by Blogger.