Header Ads



ஹிஜாப் அணிந்த முன்னால் மொடல் அழகிகளும், குட்டைப் பாவாடைகளின் கொடுமைகளும்


(ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக ஏக்கூப் பைஸல்) 

முட்டாள்களின் கருத்துகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். ஏன் எனில் முட்டாள்கள் இல்லாவிட்டால் அறிவாளிகளால் வெற்றி பெற முடியாது.

ஹிஜாப் என்பதன் விளக்கம் 

ஹிஜாப் என்னும் அரபிச் சொல்லுக்கு திறை, தடுப்பு என்று பொருள்படும். முஸ்லிம் பெண்கள் ஆண்களை பாலியல் உணர்வுகளில் இருந்து தடுப்பதற்கும்; . ஆண்களிடம் இருந்து தங்களை காப்பதற்கும். தனது அழகை கணவனுக்கு மட்டும் காட்டுவதற்கும் . ஆடவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கும் .இறைவன் பெண்களுக்கு விதித்திருக்கும் உரிமைகளின் வரம்புகளை மீராது இருப்பதற்கும் ஹிஜாப்பினை முஸ்லிம் பெண்கள் அணிகின்றார்கள்.

ஹிஜாப் பற்றி அல்குர் ஆன் 

ஹிஜாப் பற்றி அல்குர் ஆன்  பின்வருமாறு குறிப்பிடுகிறது ' (நபியே ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொhள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக ! அவர்கள் தமது அலங்காரத்தில் (இயல்பாக ) வெளியே தெரிபவற்றைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். மேலும் தமது முக்காடுகளை ( நீட்டி )த் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்துக்) கொள்ளட்டும்'(அல்குர்ஆன் 24:31) மேலும் ஒருவசனத்தில் குறிப்பிடும் போது  ' நபியே! உம் மனைவியர்க்கும் உம் புதல்வியர்க்கும் இறைநம்பிக்கை கொண்ட பொண்களுக்கும் அவர்கள் தம் முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக ! அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக ) அறியப்படுவதற்கும்( பிறரின் ) தொல்லைக்கு உள்ளாகமலிருப்பதற்கும் இது ஏற்றதாகும் (அல்குர்ஆன் 33.59) இவ்வாரு குறிப்பிடுவதன் மூலம் பெண்களின் உரிமைக்கான பாதுகப்பை இஸ்லாம்  1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சுதந்திரத்தினை வழங்கியிருக்கின்றது என விளங்கிக் கொள்ள முடிகிறது. 

இலங்கையில் ஹிஜாப்பிற்கு எதிராக யார் போராடுகின்றர்கள் 

 பெண்களை இன்று ஆடம்பர பொருளாகவும் , ஆண்களின் பாவனைப் பொருற்களுக்கு   விளம்பரத்; தரகராகவும், உடலில் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை பணத்திற்கு வெளியில் காட்டும் போதைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றவர்கள்;. நாங்கள் பெண்களுக்கு உரிமை வழங்கிவிட்டோம் என்;று மார்தட்டிப் பேசுகின்றவர்கள் இஸ்லாம் மட்டும்ந்தான்  பெண்களை அடிமையாக  வைத்திருக்கின்றது எனக் குறிப்படுகின்றார்கள். 

ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்களின் காவலன் ,அதனை தெரிவு செய்வது முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமை.  அந்த உரிமையை பறித்து எடுக்க விமர்சிப்பவர்கள்தான் தீவிரவாதிகள் ஆவார்கள்;. குட்டைப் பாவாடையை அணிந்து மறைக்கப்பட வேண்டிய உறுப்புக்களை ஆண்களுக்கு காட்டுவதற்கு  விரும்பும் பெண்களில் ஒரு சிலரும்;, குட்டைப் பாவாடைகள் அணியும் பெண்களில்  அதிகம் மகிழ்சியடையும் ஆண்களில் ஒரு சிலரும்தான் இலங்கையில் ஹிஜாப்புக்கு எதிராகப் போராடுகின்றர்கள். 

முஸ்லிம் பெண்கள் விரும்பி அணியும் ஆடை ஹிஜாப் 

ஹிஜாப் என்பது சுதந்திரமான ஆடையில்லையென்றும் மொடல் ஆடையில்லையென்றும்; வாதிடுகின்றவர்கள்.  பின்வரும் பதங்களுக்குறிய விளக்கத்தினை அறிதல் வேண்டும்.  சுதந்திரம் என்பது ஒருவர் தங்குதடையின்றி அனுபவிப்பது. ஆடை என்பது உடலை மறைப்பது. என்ற வேறுபாட்டினை புரியாதவர்கள்தான் ஹிஜாப் ஆடை மொடல் ஆடையில்லை என்றும் பெண்களின் சுதந்திரத்திற்கு தடையாகவும் இருக்கிறது என்றும் கருதுகின்றார்கள். முதலில் பெண்கள் ஹிஜாப் அணிவதால் பெண்களின் சுதந்தரத்திற்கு தடையென்பதை ஹிஜாப் அணியும் பெண்கள்தான்; சொல்ல வேண்டும். ஹிஜாப் பற்றி தெரியாதவர்களும், தங்களது மதத்தின் ஆடைகளை தினிக்கும் மாற்று மத அடிப்படைவாதிகளும் செல்ல முடியாது. இஸ்லாம் எந்த ஒரு விடயத்தையும் கட்டாயப்படுத்தி திணிப்பதை விரும்பவில்லை என்பதை இவர்கள் உணர மறுக்கின்றார்கள். 

ஹிஜாப் அணிந்த அமொரிக்காவின் முன்னால் மொடல் அழகி ஸாரா பூக்கர் 

அமெரிக்காவின் முன்னால் மொடல் அழகி ஸாரா பூக்கர் 2001.செப்டம்பர்.11.ஆம் திகதி இஸ்லாத்தை ஏற்றபின் ஹிஜாப் பற்றி குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிட்டார் . 'முதல் முதலாய் முஸ்லீம் பெண்கள் தலையை மறைக்க அணியும் துணியை கட்டிக் கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில் தான் நேற்றுவரை கவர்சிகராமான குட்டையான (ஷாட்ஸ் ), நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன் .வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப் பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. நான் சுதந்திரப் பெண்ணாக இப்போதுதான் என்னை நான்  உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்தப் பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல். என்னைச் சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று என் உள்ளம் குதுகளித்தது. என் தோள்களில் இருந்து பெரிய சுமை கீழிறக்கி வைக்கப்பட்டது போல் நான் உணர்ந்தேன். முன்பு போல நான் ஷாப்பிங் செய்வதிலும். ஒப்பனை செய்து கொள்வதிலும் , கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. ஹிஜாப் அணிந்ததில் இருந்து நான் முழுச் சுதந்திரம் அடைந்துவிட்டதாக  உணர்ந்தேன்'. எனவே பெண்களுக்கு ஹிஜாப் ஆடையானது சுதந்திரத்தினையும், அழகினையும், பாதுகாப்பையும் வழங்குகிறது என்று கூறிப்பிட்டார்  

நோபல் பரிசை பெறுவதற்கு ஹிஜாப் அணிந்து சென்ற தவக்குல் கர்மான் 

ஹிஜாப்பை பயங்கர வாதத்தின் சின்னமாகவும் கல்விக்கு தடையின் சின்னமாகவும் விபரிப்பவர்களுக்கு    2011 ஆம் ஆண்டு  யேமன் நாட்டின்  பெண்மணியான  பிரபல டைம் மாத இதழான பர்ஸன் ஆஃப் த இயரில் தேரந்தெடுக்கப்பட்ட தவக்குல் கர்மான் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக் கொள்வதற்கு மேடையில்  ஹிஜாப்புடன் தோன்றினார். இதன் மூலம்  ஹிஜாப் முஸ்லிம் பெண்களின் உரிமைக்கான சின்னம், தன்னம்பிக்கையின் அடையாளம் என உலகிற்கு எடுத்துகாட்டினார்.

 ஒரு பத்திரிகையாளர்   தவக்குல் கர்மான்னிடம்  நீங்கள் ஹிஜாபை ஏன் அணிகின்றீர்கள் ? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது. ? என்று கேள்வியொன்றை கேட்டபோது. அதற்கு தலக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார் ' ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள் அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள் நானும் எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்தமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும். '  இக் கருத்தின் மூலம் இலங்கையில் ஹிஜாப்க்கு எதிராக போராடுகின்றவர்கள் ஆதிகாலத்தை (வேடர் காலத்தை ) நோக்கி செல்கின்றார்கள் என்பது வெளிப்படுகின்றது.  

இங்கிலாந்தில் இளைஞர் பாராளுமன்றத்தில் ஹிஜாப் அணிந்து உறையாற்றிய  சுமையா கரீம்!

இஸ்லாமியா நாடு அல்லாத இங்கிலாந்தில்  இளைஞர்  பாராளுமன்றத்தில் மேற்கு லண்டனில் உள்ள வோக்கிங்கம் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 வயது மாணவி  சுமையா கரீம் ஹிஜாப் அணிந்து 2012.11.26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இதன்மூலம் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு ஹிஜாப் தடையில்லை என்பதையும். ஹிஜாப் ஆடையினை நாங்கள் விரும்பி அணிகின்றோம் எண்பதனையும் உலகிற்கு வெளிப்படுத்தினார். 


பெண்களின் ஊடக தொழிலுக்கு ஹிஜாப் தடையில்லை பத்திமா நபீல் 

தகவல் தொழிநுட்ப காலத்தில்  ஹிஜாப் ஆடையானது பெண்களுக்கு பெருத்தமற்றது என்கின்றார்கள். எகிப்திய புரட்சிக்கு பின்னர் எகிப்தில் உள்ள பிறபல தொலைக்காட்சியில் பத்திமா நபீல்  ஹிஜாப்பை அணிந்து செய்தி வாசித்தார். இதன் மூலம் எங்களால் எதையும் செய்ய முடியும் என்று உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

ஹிஜாப் அணிந்து  காவல்துறையில்  கடமையாற்றும்  டோன்னா ஜம்மால் 

இஸ்லாமிய நாடு அல்லாத பல்கலாச்சார நாடான  ஸ்வீடனில் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த டோன்னா ஜம்மால் என்ற பெண்மணி ஹிஜாப் அணிந்த முதல் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றினார். இதன் போது கடமையினை சிறப்பாகவும். ஹிஜாப் அணிவதால் காவல்துறைப் பணிக்கு எந்த வகையிலும் இடையூரு இல்லை என்பதனையும், தனது பணிகளை ஹிஜாப் அணிவதன் மூலம் மிகச் சிறப்பாக செய்யவும் முடிகின்றது எனக் குறிப்பிட்டார் . இதன் மூலம் ஹிஜாப் ஆடை ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என்பதனை எடுத்துக் காட்டினார்.

பிரான்ஸில் சுட்டுக்கொல்லப்பட்ட மர்வா அஷ்ஷர்பீனியின் மரணத்திற்கு பின் ஹிஜாப்பின் வளர்சி

பிரான்ஸ் நாட்டில் 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  பெண்கள் ஹிஜாப் அணியத் தடைவிதிக்கப்பட்டது. இத்தடையினை மீறி மர்வா அஷ்ஷர்பீனி எற்ற 32 வயது பெண்மணி  ஹிஜாப்பை அணிந்து நீதின்றதில் வழக்குத் தாக்கல் செய்தார். ஹிஜாபின் வழக்குக்காக 2003. செப்டம்பர் 4 ஆம் திகதி நீதிமன்றம் வந்த வேலை ஹிஜாப்பை எதிர்த்து போராடுகின்ற குழுக்களால் நீதின்ற வளாகத்தில் வைத்து மர்வா அஷ்ஷர்பீனியும் அவரது  2 ½ வயது குழந்தையும் , கணவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதன்பிறகு பிரான்ஸ் நாட்டில் ஹிஜாப் அணிந்த பெண்களை அந்நாட்டில் அதிகாரபூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாற்று மத பெண்களால் ஹிஜாப்பிற்கு அதிகமாக வரவேற்பு அளிக்கப்பட்டு  வந்தது. இதன் பிறகுதான் ஹிஜாப் அணியத் தடைவிதிக்கபப்ட்ட பிரான்ஸி ல் ஹிஜாப் அணிபவர்களின் எண்ணைக்கை அதிகரித்தது. இதன் போது ஹிஜாப்பினை ஆய்வு செய்த  தென் ஆப்ரிக்காவின் இளவரசியான ஹசின் ஹிஜாப் அணிந்து இஸ்லாத்தை ஏற்றார.;  ஹிஜாப் அணிந்தமைக்காக  உயிர் நீத்த மர்வா அஷ்ஷர்பீனியின் மரணத்தின்கு பின்னர் முஸ்லிம் நாடுகளும் , அமைப்புகளும் ஒற்றுமைப்பட்டு செப்டம்பர் 4 ஆம் திகதியை உலக ஹிஜாப் தினமாக அனுஷ்டிக்க முடிவெடுத்தார்கள்.  

அமெரிக்காவில்  ஷைமா கொல்லப்பட்டதன் பின் ஹிஜாப்பின் வளர்ச்சி

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் ஹிஜாப் அணிந்த குற்றத்திற்காக ஈராக் நாட்டுடைச் சேர்ந்த ஷைமா ஹிஜாப்பிற்கு எதிரான இனவெறியன் ஒருவனால் கொல்லப்பட்டர். இதற்கு பிறகு ஷைமாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் மாற்று மதங்களைச் சேர்ந்த பத்து இலட்சம்  பெண்கள்  ஹிஜாப் அணிந்து ஒற்றுமை உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்;. இச் சம்பவம் மூலம் ஹிஜாப்பிற்கு தடைவிதித்தால் ஹிஜாப் அணிகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஷைமாவின் மரணம் அமெரிக்காவிற்கு எடுத்துக் காட்டியது. 

இலங்கையில் பாடசாலைகளில் ஏன் ஹிஜாப் அணியவேண்டும்..? 

கிழக்கு மாகாண கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில்  அதிபர்கள் , ஆசிரியர்கள், ஊழியர்கள் பற்றிய  24 அதிகாரிகளின் பாலியல் முறைப்பாடுகள் இருப்பதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார் . இந்த நிலையில் முஸ்லிம் பெண்கள்  பாலியல் உணர்வுகளை ஆண்களுக்கு தூண்டாது இருக்கவும். இஸ்லாம் விதித்திருக்கின்ற பொண்களுக்கான உரிமையினை கடைப்பிடிக்கவும்.  பாடசாலைகளில்  ஹிஜாப் அணிகின்றார்கள்.

2013 ஆம் ஆண்டு இலங்கையில் ஹிஜாப் அணிய தடைவிதித்த பாடசாலைகள் 
2013.02.19 ஆம் திகதி ருவன்வெல்ல பிரதேசத்தில் சிங்கள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளை ஹிஜாபினை கழற்றி பாடசாலைக்கு வரும்படி பாடசாலை அதிபர் உத்தரவிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள்; நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கொன்றினை அதிபர் மீது செய்தார்கள். அதனை அடுத்து பாடசாலையில் மாணவிகள் ஹிஜாப் ஆடையை அணிய முடியுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2013.02.21 கல்முனை காமல் பாத்திமா பாடசாலை அதிபரால் மருதமுனையைச் சேர்ந்த ஆசிரியையை சேலை கட்டி வரும்படியும் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வர வேண்டாம் என்றும் தடைவுத்தரவு பிரப்பித்தார். 2013.03.26ந் திகதி களுத்துறையில் உள்ள பாடசாலையில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியையின் ஹிஜாப்பை கழற்றி விட்டு பாடசாலைக்கு வரும் படி பௌத்த பிக்குவான ஆசிரிய ஆலோசகரரும் , பாடசாலை அதிபரரும் எச்சரிக்கை விடுத்தார்கள்.

ஏன் பாடசாலை அதிபர்கள் ஹிஜாப் ஆடைக்கு தடைவிதிக்கின்றார்கள்

 அண்மையக் காலமாக பாலியல் உணவுர்கள் அதிகரித்து காணப்படும் பாடசாலைகளில் சில அதிபர்கள் முஸ்லிம் பெண்களின் அந்தரங்க இடங்களைப் பார்ப்பதற்காக ஹிஜாப்களை கழற்றி வரும் படி உத்தரவிடுகின்றார்கள் அந்த வகையில் மேற்குறிப்பிடப்பட்ட பாடசாலை அதிபர்களின் மன நிலையினை பரிசோதித்து ஏதாவது  உளவியல் பிரச்சினைகள் இருந்தால் விஷேட கடன் திட்டத்தின் மூலம் அரசாங்கச் செலவில் வைத்தியம் பார்க்க வேண்டும். அப்படி அவர்களுக்கு மனநிலைப் பிரச்சினையில்லாவிடின் அரசியல் யாப்பில் விதிக்கப்பட்ட மதச் சட்டத்தினை மீறுகின்றபடியினாலும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் துணைபோகின்ற செயற்பாடுகளை ஊக்குவிப்பதாலும் மேற்குறிப்பிடப்பட்ட  பாடசாலைகளின் அதிபர்களின்   பதவியினை  நீக்க வேண்டும்.  

இலங்கையில் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு  காரணம் குட்டைப்பாவடைகள்  

இலங்கையின் பாலியல் துஷ்பிரயோக  தரவுளை நோக்கும் போது   1990 ஆம் ஆண்டு – 665 பாலியல் துஷ்பிரயோகமும்  ,1995 ஆம் ஆண்டு - 542 பாலியல் துஷ்பிரயோமும்; ,2007 ஆம் ஆண்டு -1397 பாலியல் துஷ்பிரயோகமும்  , 2008 ஆம் ஆண்டு – 1592 பாலியல் துஷ்பிரயோகமும், .2009 ஆம் ஆண்டு -1624 பாலியல் துஷ்பிரயோகமும்  , 2010 ஆம் ஆண்டு – 1854 பாலியல் துஷ்பிரயோகமும்  ,2011 ஆம் ஆண்டு – 1636 பாலியல் துஷ்பிரயோகமும்  ,2012 ஆம் ஆண்டு - 1800 பாலியல் துஷ்பிரயோகமும்  நடைபெற்றுள்ளது என்பதனை இத்தரவுகள் மூலம் அவதானிக்க முடிகின்றது.

  இன்று இலங்கையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5  பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுகின்றார்கள்;. இத் தரவுகளின்; மூலம் ஆய்வு செய்கின்ற போது குட்டைப் பாவாடைகளும், உடலை வெளிக்காட்டும் அந்தராங்க ஆடைகளின் வெளித் தோற்றமும் காரணம் என தெரிய வருகின்றது. பாலியல் குற்றத்தை புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டகைள் வழங்கப்பட்டது . இருந்தும் அந்த பாலியல் குற்றத்தை தூண்டியது குட்டைப் பாவாடைகள் அணிந்த பெண்களின் கவர்ச்சியே.  சட்டப்படி பார்ப்பதானால் குற்றம் செய்தவரை விட குற்றத்தை செய்யத் தூண்டியவர்களுக்குத்தான் தண்டனை கொடுக்க வேண்டும். எனவே நாட்டின் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதை தடுக்க பெண்கள் கவர்சிப் பகுதிகளை மறைக்கும் ஆடைகளை அணிய அரசாங்கம் சட்டங்களை இயற்ற வேண்டும்.

இலங்கையில் நடைபெருகின்ற பாலியல் துஷ்பிரயோத்திற்கு ஒரு சில பெண்கள் அணிகின்ற ஆடைதான்; காரணம். இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது ஆண்கள் பெண்களின் நிறம், அழகு ,இளமை , உறுப்புக்கள் ஆகியவைகளை ரசிக்கின்றார்கள் இத் தூண்டல்  காரணமாகத்தான் பாலியல் துஷ்பிரயோத்திற்கு ஆடைகள் காரணமாக அமைகின்றது.

ஹிஜாப் அணிகின்ற நாடுகளில் வன்கொடுமைகள்  இடம்பெறுவதில்லை  ஹிஜாப் அணிகின்ற இஸ்லாமிய நாடுகளில் பாலியல் குற்றங்கள், விபச்சாரம், கற்பழிப்பு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்  நடைபெறுவதில்லை. இதற்கு காரணம் ஆண்களை கிளர்ச்சியூட்டும் உடைகளை பெண்கள் அணிவதில்லை என்பதனை ஆய்வுகளின் மூலம் நாங்கள் அறிந்துகொள்ள முடியும். 

கிரம விமல ஜோதி தேரர் முஸ்லிம் பெண்களுக்கு குட்டைப் பாவடைகளை அணிவிப்பதற்கு போராடுகின்றார் ! 

அன்மையக் காலங்கலாக இலங்கையின் பல பௌத்த அமைப்புக்கள் குட்டைப் பாவாடை அணிபவர்களுக்கு ஏதிராக போராடாமல். முஸ்லிம் பெண்கள் உடலை மறைக்கும் ஹிஜாப்பிற்கு எதிராக போராடுகின்றார்கள். இவ் போராட்டங்களால் ஹிஜாப் அணிபவர்களை அதிகரிக்கும் என்பதில் சந்தேசகம் இல்லை. பால் உறுப்புக்களை மறைத்தால்தான் அது ஆடை இல்லை என்றால் ஆடை என்று கருத முடியாது. பால் உறுப்புக்களை வெளியில் காட்டும் ஆடைகளை அணியும் பெண்களை நான் ஆதிகால பெண்களாகவே கருதுகின்றேன். ஏன் எனில் அதிகாலத்தில் ஆடையின்றி வாழ்ந்த பெண்களும் , இன்று ஆடை அணிந்து வாழ்கின்ற பெண்களும் ஒரே தோற்றத்தில் தான் காட்சியளிக்கின்றார்கள். 

பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் ஹிஜாப் விடயத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் விலக வேண்டும் என்று கூறிப்பிட்டார். இதன் மூலம் இஸ்லாம் அடிப்படைவாதம் என்று பேசுகின்ற தேரர். பௌத்த மதத்தின் அடிப்படைவதியாக பேசுவதை மறந்துவிட்டார். பௌத்த மதத்தினை நன்றாக படிக்காத தேரர்களால் இஸ்லாம் மதத்தினை தெளிவாக விளங்கி கொள்ள முடியாது. எனவே சிங்கள மொழியில் தேர்ச்சியுள்ளவர்கள் இந்தக் கட்டுரையை மொழிபெயர்ப்பு செய்து இணையத்தில் பதிவிறக்கவும். 



5 comments:

  1. Best Article Jaffna Muslim

    ReplyDelete
  2. this shroud be in English

    ReplyDelete
  3. this should be in English

    ReplyDelete
  4. சிறந்த ஆக்கம். மேலும் மாற்று மொழிகளில் தந்தால் நாமும் எம் மாற்றுமத சகோதர,சகோதரிகளுகளுடன் பகிர முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.