Header Ads



இலங்கையும், சிறுவர் துஷ்பிரயோகமும்..!


(ரீ.கே.றஹ்மத்துல்லா)

ஒரு நாட்டின் முக்கிய வளமாகக் கருதப்படவேண்டிய சிறுவர்கள் தொடர்பில் நம்மில் அனேகம்பேர் மிக கவனயீனமாககே இருந்து வருகின்றோம். இதனால் அவர்களின் எதிர்காலம் நெறிபுரண்டு பெற்றோருக்கும், இந்த நாட்டிற்கும் பெரும் சவாலாகவே மாறிவருகின்றனர்.

முக்கியமாக இன்று சிறுவர் துஷ்பிரயோகம் எனும் வார்த்தைப் பிரயோகங்கள் நம்மில் அனேகமானோரின் காதுகளில் ஒலித்திருந்தாலும் அவைகள் பற்றிய பூரணமான அறிவை அதிகமானோர் பெற்றிருக்காமையே சிறுவர் துஷ்பிரயோகங்களின் வீதம் அதிகரிப்பதற்கான காரணமாகக் கருதவேண்டியுள்ளது. 

ஒருவர் அல்லது குழுவினர் 16 வயதிற்குற்பட்ட சிறுவர் அல்லது சிறுமியை உடல் ரீதியாக நோவினை ஏற்படுத்துவது, மனரீதியாக காயப்படுத்துவது, பாலியல் ரீதியாக நோவினை செய்வது, பாகுபாடு, புறக்கணிப்பு மற்றும் மருத்துவ உதவியளிக்காது விடுதல் என்பன சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்களாகக் காணப்படுகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகம் பின்வரும் வடிவில் காணப்படும்.

Physical Abuse : Involves bodily injury.

Emotional Abuse : Involves mental suffering.

Sexual Abuse : Involves inappropriate touching of a child or any act that  provides arousal or sexual gratification.

Neglect : which is failing to provide for the needs of a child in your care.

Medical Neglect : which is not providing medical treatment for a child in your  care who has a life threatening condition.



துஸ்பிரயோகம் அல்லது வன்முறையின் பின் சிறுவர்களில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் பற்றி நாம் அவதானிக்கும் போது,

01.அநேகமான சிறுவர்கள் தமக்கு ஏற்பட்ட துஸ்பிரயோகம் பற்றிய தகவல்கள் எதையும் வெளியில் சொல்வதில்லை. இது குற்றம் செய்தவரில் இருந்து வரும் பயத்தினால் ஏற்படுகின்றது. இது குற்றம் செய்தவரினாலும் அவர்களுக்கு சொல்லப்படுகின்றது. இதை எதிர்த்தால் அல்லது எவரிடமாவது சொன்னால் ஏதாவது கெட்டது நடக்கும் என நினைக்கிறார்கள். மற்றும் சிறுவர்கள் சில வேளைகளில் இந்த துஸ்பிரயோகம் பிழையானது என்று புரியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

02.பல சிறுவர்கள் வன்முறை அல்லது துஸ்பிரயோகங்களுக்குப் பின் பல  வகையான எதிர்மறையான விளைவுகளை வெளிக்காட்டுவார்கள். இவை நடத்தை மாற்றங்களாகும். இந்த எதிர் நடத்தை துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டதற்கு ஒரு அறிகுறியாகும். ஆனால் துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்படும் போது இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் அல்லது சம்மதம் தெரிவிக்காமலிருக்கலாம். ஏனெனில் இது எப்போதும் பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையால் குற்றமாக கருதப்படுவதில்லை. பாதிக்கப்படும் போது அல்லது போராடும் சந்தர்ப்பங்களில் அநேக சிறுவர்கள் தற்காலிகமாக மனவருத்தத்தினால் எதிர்ப்புகளைக் காட்டலாம்.  இம்மன அழுத்தத்தை அடையாளம் காண்பதற்கு மிகவும் அவதானமாக குழந்தையை கையாள வேண்டும். 

03.சிறுவர்கள் அவர்களது விருத்திப் படியின் கடைசி நிலையில் தங்களுக்கு என்ன நடந்தது என்பதையும் தங்கள் பாலியல் அபிவிருத்தியையும் அவர்கள் பூரணமாக விளங்கிக் கொள்கிறார்கள். மற்றைய சிறுவர்களுடன் ஒப்பிடும் போது தங்களுக்கு நடந்த துஸ்பிரயோகத்தின் பாதிப்புகளினால் மன ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நினைத்து வருந்துகின்றனர். 

அடுத்து துஸ்பிரயோகம் அல்லது வன்முறையின் பின் சிறுவர்களில் காணப்படும் நடத்தை மாற்றங்களாக-

01. பொருத்தமற்ற பாலியல் கலந்த நடத்தை 

சிறுவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் போது அவர்களின் 'எது சரி;;;','எது பிழை' என்ற உணர்ச்சி நிலை குழப்பமடைகின்றது. அவர்கள் என்னதான் தங்களது உடலையும் பாலியல் செயற்பாடுகளையும் பற்றி முன்னே படித்திருந்தாலும் அது பெறுமதி அற்றதாகிவிடுகின்றது. அவர்களுடைய குடும்பத்திலுள்ள யாரோ ஒருவரால் ஒரு சிறுவர்; பாலியல் துன்புறுத்தப்பட்டால், இன்னும் ஒருவருடன் பாலியல் சம்பந்தம் வைப்பதில் தப்பில்லை என நினைக்கிறார்கள். இவ்வாறு சிறுவர்கள் பாலியல் உணர்வுகளில் அனுபவப்படும் போது அவ்வுணர்வானது பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சாதாரணமாகின்றது. அவர்கள் மீண்டும் மீண்டும் அதை அனுபவிக்க விரும்புவார்கள். மற்றைய சிறுவர்களுக்கு அதை புரிய வைக்க முயற்சிப்பதோடு தாங்களும் அவ்வாறு நடந்து கொள்ள முயல்கின்றனர். சில சூழ்நிலைகளில் இத்தொல்லையை இவர்களின் கெட்ட நடத்தையின் பின்விளைவுகளாகவும் கருதலாம். இதனால் இவர்களை மற்றவர்கள் கெட்டவர்களாகவும், குற்றமிழைத்;தவர்களாகவும் கருதுகின்றனர்.    

பாலியல் கலந்த நடத்தை ஒரு குறி;ப்பிட்ட அளவில் சாதாரண பிள்ளை விருத்திப்பகுதி ஆகலாம். இருந்தும், இது உயர் அளவுகளில் அல்லது விருத்திக்குரிய வயது நிலைக்கு முன்பாகவே தோன்றும் போது அல்லது பலவந்தமாக இன்னும் ஒருவருடன் தொடர்பு கொள்ளும் போது (அச்சிறுவர் இன்னொரு சிறுவரை பாலியல் தொடர்புகளுக்கு வற்புறுத்துகின்றது) அல்லது உணர்ச்சி வசப்பட்ட மனக்கவலையுடன் சம்பந்தப்படும் போது அச்சிறுவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. 

02. படுக்கையை ஈரமாக்கல் அழுக்காக்கல் Bed wetting  \  Soiling

அநேக இளம் சிறுவர்கள் பாலியல் வன்முறையின் பின் மலம், சலம் கழித்தலில் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். இது பெற்றோர்களுக்கும் விரக்தியை ஏற்படுத்துகின்றது. மேலும் குழந்தைகளுக்கும் குழப்பத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தலாம். 

குழந்தைகள் மனக் குழப்பத்தினால் அல்லது மனக் கவலையினால் சுகயீனம் அடையும் போது, அடிக்கடி படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம். பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அடிக்கடி இரவில் ஒரு தடவையோ,  இரவில் பல தடவையோ  படுக்கையை நனைக்கலாம். படுக்கையை நனைத்தல் என்பது உணர்வுகளுடன் தொடர்பு உடையதாக இருக்கும். அத்தோடு, பயங்கர கனவுகளின் பின்பும் ஏற்படலாம். படுக்கையை நனைத்தல் பொதுவாக ஒரு குழந்தையின் உதவியற்ற நிலையை தொக்கி நிற்கின்றது. அக்குழந்தை அதனை விட பலம் வாய்ந்த ஒருவரினால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் போது 'தன் உடம்பை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே' என்றும் 'இவ்வுடம்பு எனக்குச் சொந்தமில்லை' என்றும் கைசேதப்படுகின்றது. 

03. அச்சமூட்டும் கனவு

எல்லா சிறுவர்களும் அடிக்கடி கெட்ட கனவுகளை காணுகின்றனர்.. ஆனால்,பாலியல்  தாக்கத்தினால் பாதிப்புற்று  சிறுவர்கள் அடிக்கடி இரவில் அச்சமூட்டும் கனவுகளை ஒரு தடவையோ  அல்லது ஒரே இரவில் பல தடவையோ  கண்டு கத்தலாம். அவர்கள் மீண்டும்  மீண்டும் ஒரே கனவைக் காண்பதால் அச்சம் அடைகிறார்கள். இக்கனவுகள் அவர்களை அச்சமூட்டுவதால் இருட்டினைக் கண்டு பயந்து கொள்கின்றனர். வித்தியாசமான நடத்தைகள் ஏற்படுகின்றன. அவர்களின்  கனவுகள் பயத்தினை பிரதிபலித்து  அவர்களது கட்டுப்பாட்டு உணர்வுகளையும் குறைக்கின்றது.  அவர்களின் கனவுகளை சொல்லுமர்று கேட்பதன் மூலம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எம்மால் ஊகிக்கலாம்.

04. தொடர்ச்சியான நோவு அல்லது வலிகள் 

அநேகமான சிறுவர்கள் உடலியல் காரணங்கள் எதுவும் இன்றியே நோவு மற்றும் வலிகளை உணர்கின்றார்கள். இது தாக்குதல் காரணங்களுடன் தொடர்புடையதாகும். சில வேளைகளில் சிறுவர்களுக்கு பாலியல் தாக்கத்தினால் வலிகள் ஏற்பட்டிருப்பின், அவ்வலியானது உடலில் தொடர்ந்து உள்ளது போன்ற நினைவுகளை உடல் கொண்டிருக்கும். உதாரணம் ஓரு பிள்ளை கைகள் கட்டப்பட்ட நிலையில் பாலியல் தாக்கத்திற்க்கு உட்பட்டிருந்தால் தொடர்ந்து கைகளில் வலிகளை உணர்ந்து கொண்டிருக்கும். இன்னொரு பிள்ளைக்கு  பெண் உறுப்பினூடான செய்கையின் பின்பு தீவிர வயிற்று நோவு தொடர்ந்து கொண்டிருக்கும். இன்னொரு பிள்ளைக்கு உணர்ச்சிகள் துன்புறுத்தப்பட்டிருந்தால் ஏதோவென்று தெரியாத தலை வலியால் வருந்தும் இச்சிறுவர்கள் தங்களுக்குள்ளே ஏதோவென்று நொறுக்கப்பட்டுள்ளதாக நினைக்கலாம். மீண்டும் மீண்டும் ஏற்படும் வலிகளால் மேலதிக அன்பும் ஆதரவும் அதிகரிக்கும் என்று பிள்ளைகளுக்குத் தோன்றலாம். அத்தோடு அந்நேரத்தில் திரும்பவும் அதே போன்ற நிலையை விரும்பலாம். சில வேளைகளில் அவர்களாகவே உடல் ரீதியான உணர்ச்சிப் பெருகுகளை வெளிப்படையாகக் காட்டலாம். ஏனெனில்  அவர்கள் வார்த்தைகளால் விபரிக்க முடியாத இயலாமையை கொண்டிருப்பதனாலாகும். 

05. பெற்றோர் அல்லது பாதுகாவலரில் தங்கியிருத்தல் ஷஒட்டியிருத்தல்
முன்பு சுதந்திரமாக நடமாடிய சிறுவர்கள் பாலியல் தாக்கத்தின் பின் தங்களின் பெற்றோர்களின் அல்லது பாதுகாவலர்களின் அருகாமையை உறுதியாக பிடித்துக் கொள்வார்கள். இது 'அன்பையும் பாதுகாப்பையும் கொண்ட நம்பிக்கையை ஊட்ட வேண்டிய கட்டாயத் தேவையை அவர்கள் விரும்புகிறார்கள்'என்ற நிலைமையை நமக்கு விளக்கும் ஓரு தொடர்பாடல் ஆகும். 

06. ஆக்ரோச எண்ணங்கள் கோபம் 

பாலியல் தாக்குதலின் பின் சிறுவர்களில் ஆக்ரோச எண்ணங்கள் பயம் அல்லது கோபம் என்பன மேலோங்கி இருக்கும். 

இவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுவர்களுக்கு நலம் ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.இவை சாத்தியமான, நலமான நடவடிக்கைகளாகவும் இருக்க வேண்டும். 

· பெற்றோர் அல்லது பாதுகாவலர் தன்னோடு இருக்கின்றார் என்ற உணர்வை சிறுவர்களுக்குஏற்படுத்துங்கள்.

· வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்ற சிறுவர்கள் தனது முழுக்கட்டுப்பாட்டையும் இழந்த நிலையை உணர்கின்றனர். அத்தோடு தான் நிர்க்கதியாக்கப்பட்டது போன்றும் உணர்கின்றனர். நாளாந்த வாழ்க்கையை படிப்படியாக அவர்கள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர உதவி செய்வதோடு, அவர்கள் அமைதியான பாதுகாப்பான சூழலில் உள்ளார்கள் என்பதையும் உணர்த்தவும்.

· பாதுகாப்பான சூழலில் சிறுவர்களின் கருத்துகளை வெளிப்படுத்த உதவுவதோடு அமைதியான, ஆதாவான இடத்தில் தமக்கு நடந்த விபரீதத்தை விபரிக்க நம்பிக்கையூட்டி இடம் அளிக்கவும். மேலும் அவர்களது கெட்ட கனவுகள் சம்பந்தமாக கதைப்பதற்கு போதிய அவகாசம் அளிக்கவும்.

· பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்கள் தம்மை குற்றம் இழைக்காதவர்களாகவே கருதுகின்றனர். இதிலிருந்து நிவர்த்தி செய்ய அவர்களுக்கு உதவி செய்ய முடியும். 

அத்தோடு நீங்கள் ஒரு உதவி வழங்குனர் என்ற வகையில் பாதிக்கப்பட்ட சிறுவரை சிறந்த முறையில் கையாள வேண்டியிருப்பின் கீழ் வருவனவற்றை செய்யாதிருத்தல் அவசியம் எனக் கீழ்வரும் விடயங்களை கூறினார். 
· ஒரு போதும் சிறுவரை நடந்த வன்முறையைப் பற்றி கதைக்க வற்புறுத்த வேண்டாம். அத்தோடு அவர்களுக்கு ஏற்படும் பயங்கர கெட்ட கனவுகளை சொல்லுமாறும் வற்புறுத்த வேண்டாம். மேலும் அவர்களது உணர்வுகள்  என்ன என்பதை வற்புறுத்திக் கேட்க வேண்டாம்.

· அச்சிறுவர் விரும்பாத  போது அவரை தொடுவது அல்லது அணைப்பது கூடாது. உடல் ரீதியான தொடுகை அச்சிறுவரை ஒரு குழப்ப நிலைக்கு அல்லது பயந்த நிலைக்கு அல்லது நோவினைக்கு இட்டுச் செல்லும்.

· சிறுவரின் மாறுபட்ட ஷ வித்தியாசமான நடத்தைகளுக்காக (கோபம், படுக்கையை நனைத்தல், மாறுபட்ட பாலியல் நடத்தைகள்) அவர்களை ஏசவோ அல்லது அதட்டவோ அல்லது தண்டிக்கவோ ஒரு போதும்  வேண்டாம்.

· சிறுவர்களுக்கு நடந்த நிகழ்வுகளை அவர்களின் குடும்ப உறவினர்களுடன் அல்லது அவர்களின் நண்பர்களிடம் சொல்லி  அவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமுதாயத்தில் உள்ளவர்கள் உதவி செய்ய என்ன செய்ய முடியும்

· பாதிப்புக்குள்ளானவரை தள்ளி வைப்பதை விட அவரை அறிய விளங்கிக் கொள்ள முற்படவும்

· தேவையேற்படின் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்பதை தெளிவுபடுத்தவும்.

· பிழையான முறையில் அவரை நினைக்கவோ பார்க்கவோ வேண்டாம். 
· அவருடைய கதைகளை மற்றவர்களிடம் கூறி புறம்பேசித் திரிய வேண்டாம். 
· சிறுசிறு விடயங்களில் அவருக்கு உதவி செய்து உங்களது உதவும் மனப்பான்மையை வெளிக் கொணரவும். 

· ஒத்துணர்வுடன் அவரது  குறையை  கேளுங்கள்.

· அவர் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவதை விட்டு விட்டு எங்கே உதவிகளைப் பெறலாம் என தெளிவுபடுத்துக. 

· நிச்சயமாக உங்களது விருப்பங்களையும் கவலையும் தெரிவிக்குக்க.
· அவர் உங்களிடம் உதவி நாடினால் மறுதலிக்காமல் உதவி செய்யவும். 

இதனையெடுத்து,பாதிப்புக்குள்ளான சிறுவர்களுக்கு உதவுவது எவ்வாறு எனக் கூறும் போது, பிரதானமாக நான்கு விதமான உதவிகள் தேவை அவை பின்வருமாறு...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான இலங்கைக் கண்ணோட்டம்.

இலங்கையில் அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகம்...

கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் 2588 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக 2011 ஆம் ஆண்டில் 1503 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும், 1085 ஏனைய வன்முறைகளும் பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை வரலாற்றில் முன்னைய ஆண்டுகளைக் காட்டிலும் 2011 ஆம் ஆண்டிலேயே சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவானதாகவும், இவ்வாறான சம்பவங்களில் 22 சிறுவர்கள் பலியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கடந்த வருடத்தில் ஓரின இரத்த உறவுடையோரால் அல்லது உறவினர்களால் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக 09 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை கடந்த ஆண்டில் சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக 54 சம்பவங்களும், சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட 10 சம்பவங்களும், சிறுவர்கள் மீதான 247 கொடூர தாக்குதல் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2012 ஆம் ஆண்டின் முடிவடைந்துள்ள காலப்பகுதியில் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 446 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.  

இவற்றில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறித்து 1361 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனைத் தவிர 84 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், 55 பாலிய திருமணங்கள் குறித்த முறைப்பாடுகளும் கிடைத்தள்ளன. 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவது 8 வீதமாக அதிகரித்தள்ளது எனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 


No comments

Powered by Blogger.