Header Ads



தர்க்கத்திற்கு அப்பால்...!

பேராசிரியர் இஸ்மாயில் ஹஸனீ
 
عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أبغض الرجال إلى الله الألد الخصم
 
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்

மனிதர்களில் இறைவனின் கடுமையான கோபத்திற்கு ஆளானவர் அதிகமாக தர்க்கம் புரியக்கூடியவர்.

(புகாரி, முஸ்லிம்)
 
அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் உலகிற்கு வந்ததே ஆசானாகத்தான்.

நம்மிலே கூட சிலர் சொல்லுவதுண்டு " உம்மி நபி" எழுதப்படிக்கத்தெரியாதவர் என்று.

பிறந்து வரும்போதே ஆசிரியராக வருபவருக்கு யார் தான் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்.
 
வாத்தியாருக்கே பாடமா????

முதன்முதலின் வஹியாக வந்த செய்தியில் இறைவனின் பெயர் கொண்டு ஓதுவீராக என்று நபியவர்களுக்கு அல்லாஹ் ஒரு Specify ஆக கூறிவிட்டு அதற்கு அடுத்து General ஆக கூறும்போது மனிதர்களுக்கு எழுதுகோலைக்கொண்டு கற்றுக் கொடுத்தான் என்று பேசுகிறது குர்ஆன்.
 

ஆகையால் பேனாவைக்கொண்டு எழுதிக்கற்றல் பொதுவாக மனிதகுலத்தை நோக்கி சொல்லப்பட்ட தகவல் நபியவர்களுக்கு வழங்கப்பட்டது பிரத்தியோக செய்தி.

இதன் முழு விளக்கமாக நபியவர்கள் "நான் அனுப்ப பட்டதே ஆசானாக" என்று கூறினார்கள்.

இன்னும் இந்த செய்தி பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம். இதில் ஒழிந்து கிடக்கும் இறை ரகசியம் ஏராளம்.

இன்று இந்த சமுதாயத்திலிருந்து பிரிக்கமுடியாத செய்தியாகவும், எங்கும் பரவியிருக்கும் ஒர் செயல் தர்க்கம் ஆகும்.

இரு மனிதர்கள் சேர்வதிலிருந்து ஆரம்பித்து, இயக்கம், கழகம் என்று எங்கு சென்றாலும் களம் அமைத்து தர்க்கத்தில் ஈடுபடுவதைப்பார்கிறோம்.

ஒரே கொள்கைக் கொண்ட இருவர்களிடம் கூட கருத்து வேறுபாடு என்பது தவிக்க முடியாததாக ஆகிவிட்டது இன்றைய காலையில்.

வெளிநாடுகளில் (துபை, குவைத், சவூதி போன்ற நாடுகளில்) வேலைக்கென்று செல்கிற நம் சகோதரர்களிடம் விளையாட்டாக ஆரம்பிக்கும் விவாதம் கடைசியில் விபரிதத்தில் போய் முடிவடைவதை நாம் பார்க்க முடிகிறது.

பொதுவாக மிருகத்திடமிருந்து பிரிப்பதற்கு இறைவன் பேசுகிற ஆற்றலை தந்தால், அதைக்கொண்டு சில வேளை மனிதன் மிருகத்தைவிட கீழ் ஆகிவிடுகிறான்.

பொதுவாக இன்று நடைபெறும் விவாதங்கள் எல்லாம் யோசிக்கப்படவேண்டிய ஒரு செய்தியாக ஆகிவிட்டது.

நாங்கள் "கேள்வி கேட்கும் " சமூகம், எங்களை நபியவர்கள் கேள்வி கேட்கும் சமூகமாக ஆக்கியுள்ளார்கள் என்றெல்லாம் நம் சகோதரகள் பெருமைப்பட்டுக் கொள்வதை இன்று சமூகத்தில் நாம் காண்கிறோம்.

ஆனால், நபியவர்கள் எதற்காக இந்த உம்மத்தே முஹம்மதிய்யாவை கேள்வி கேட்கும் சமூகம் என்று சொன்னார்கள் என்ற உள்நோக்கத்தை மறந்து போனோம்.

ஆகவே, எதற்கெடுத்தாலும் நம் கேள்விக் கணைகள் களை கட்ட ஆரம்பித்து, எதற்கு கேட்கலாம் எதற்கு கேட்ககூடாது என்ற நிலை மாறி எதற்கொடுத்தாலும் கேள்விகள் மட்டுமே நம்மை சத்திய வழியில் நடத்தி விடும் என்று நம்ப ஆரம்பித்ததன் விளைவு.

சாதாரணமாக இரண்டு நபர்களிடம் ஆரம்பிக்கும் விவாதம், அரங்குகள் போட்டு நடத்தப்படும் விவாதமாக மாறி, எந்த எல்லையில் விவாதம் செய்யலாம் என்ற நிலைகள் மாறி, எந்த நிலைப்பற்றி பயந்து நபியவர்கள் எச்சரித்தார்களோ, இறைவனின் உள்ளமை (தாத்) பற்றி யோசிக்கவேண்டாம் என்று கூறினார்களோ அது பற்றி இன்று மேடை போட்டு விவாத்திக்க ஆரம்பித்து விட்டோம்.

தர்க்கத்திற்கு அப்பால் இருக்கும் , நம் அறிவினால் சூழ்ந்து அறிய முடியாத இறைவனை, இன்று அனல் பறக்கும் நம் விவாதங்களின் அடக்கிவிட முடியும் என்ற எண்ணத்தோடு " இறைவனுக்கு உருவம் உண்டா? இல்லையா? " என்ற தலைப்புகளின் விவாத அரங்குகளைப் போட்டு மாற்றார்களும் கைக்கொட்டி சிரிக்கும் அளவிற்கு இஸ்லாத்திற்கு சமூக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்துகிறோம்.

உண்மையில், இயக்க சிந்தனைகளிலிருந்து விடுபட்டு ஒரு தனிநபராக நின்று சிந்தித்து பாருங்கள்.

கடுமையாக விவாதம் புரிபவன் இறைசாபத்திற்கு ஆளாவான் என்ற வார்த்தை எந்த எதார்த்த செய்தியை விளக்குகிறது என்று அறிய முடியும்.

அப்பொழுது கேள்வியே கேட்கக்கூடாதா? என்ற உங்களின் வார்த்தை என் காதுகளில் விழுகிறது.

இதற்கு அழகிய பதில் அண்ணலாரின் வார்த்தையில் உள்ளது. "உங்களின் அறியாமை என்னும் நோய்க்கு மருந்து கேள்வி கேட்பதில் உள்ளது".

ஒரு செய்தியை அறியாமல் இருந்து அதற்க்காக நாம் கேள்வி கேட்டு தெரிந்து நம் நிலையை நாம் மாற்றிக்கொண்டால் அது உருப்படியானது.

இன்று கேள்வி கேட்பதே அடுத்தவர்களை மடக்குவதற்காகவும், தனக்கு எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கும் தான்.

இறைவனின் அருள் பொழியும் ரமலான் மாதம் மிக சமீபமாக வர இருக்கிறது.

ரமலான் மாதம் வந்துவிட்டால் தொலைக்காட்சியில் இருந்து ஆரம்பித்து தனிநபர் வரை, அதுவும் குறிப்பாக அரபு நாடுகளின் வசிக்கும் இஸ்லாமிய தமிழ் சமுதாயம்.. பிறை பார்ப்பதில் ஆரம்பித்து, தராவிஹ் 20தா அல்லது 8 ? லைலத்துல் கத்ரு 27தான் / இல்லை? கடைசியில் பெருநாள் இன்றா / நாளையா?, அதற்கு இடையில் சஹர் நேரத்தில் ஆரம்பித்து, தராவீஹ் வரை ஒவ்வொரு டிவியிலும் அடுத்தவர்களை வசைபாடி தாங்கள் மட்டும் இறைவனுக்கு மிகச் சரியான அடியார்கள் என்ற ஷஹாதத் வேறு.

அது மார்க்க வகையிலான விவாத்திற்கு மட்டுமல்ல மற்ற எல்ல விவாதமும் இதில் அடங்கும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அப்படி மார்க்க விஷயத்திற்கு அனல் பறக்கு விவாதம் செய்யும் இருவரும் எதாவது ஒரு வகையி்ல் இதில் முழு தகுதி (Authority)பெற்றவர்களா? என்று பார்த்தால் வேடிக்கை இன்னும் வேதனை இவர்களின் விவாதத்தின் ஆதாரங்களே எதாவது ஒரு மாதப்பத்திரிக்கையில் வந்ததாக இருக்கும் அல்லது வேறு யாராவது ஒருவர் சொற்பொழிவில் சொன்னதாக இருக்கும்.

ஆகையால் தான் இறைவன் குர் ஆனில் மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை சொல்லும் வழிகளை சொல்லும் போது கூட மூன்று வகைகளை கூறுகிறான் 1. அறிவார்ந்த முறையில் 2. அழகிய உபதேசத்தால் 3. விவாதத்தால் யாருக்கு பிரையோஜனம் கிடைக்குமோ அவரோடு விவாதத்தால்.

ஆகையால் விவாதங்கள் எல்லாம் கடைசியில் பிரையோஜனம் தரும் என்றால் மட்டுமே.

இன்று தொட்டதற்க்கொல்லாம் விவாதம் புரிய ஆரம்பித்துவிடுகிறோம்.

அந்த காலத்தில் கண்ணியத்திற்குரிய இமாம்களான அபூஹனீபா, இமாம் ஷாபியீ போன்றவர்கள் விவாதம் புரிந்தார்கள் என்றால் அவர்களிடம் இரண்டு வித தன்மைகள் இருந்த்தது.

1. உண்மையை தேடுவது : தங்கள் வரை வந்திருக்கும் இஸ்லாமிய அறிவுகளை வைத்து விவாதம் புரிவாரிகள் எதிரில் உள்ளவரிடம் அதைவிட சத்தியத்திற்கு நெருக்கம் இருக்கும் பட்ச்சத்தில் உடனே சத்தியத்திற்கு முன் தங்களின் அறிவுகளை விட்டு விட்டு அதை ஒப்புக்கொண்டு விடுவார்கள்.

2. அறிவில் முழுமை : தங்கள் பெற்றிருக்கும் இஸ்லாமிய் அறிவில் முழுமைப் பெற்றிருந்தார்கள். தங்கள் ஒரு செய்தியை முன்னிருத்தி ஒரு செய்தியை சொன்னால் நீண்ட் ஆய்விற்கு பின் தான் அந்த செய்தியை சொல்வார்கள் ஆகையால் மரணம் வரை அந்த செய்தியிருந்து பின்வாங்குதல்கள் இல்லை.

இன்றுள்ள கால கட்டத்தில் இந்த இரு செய்தியை வைத்து உரசிப்பாருங்கள்.

விவாதம் புரிவதற்கு தயாராக இருக்கும் அளவிற்கு நாம் சத்தியத்தை தேடுவதில் தயாராக இருப்பதில்லை. நம் வாதங்கள் மேலோங்குவதையே விரும்புகிறோம். அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

இரண்டாவது செய்தியை பொருத்தவரையில், இத்துணை அறிவுப்புரட்ச்சி வளர்ந்த பின்பும் ஒரு செய்தியை சொல்லி விட்டு சில வருடங்களுக்கும் பின், ஆய்வில் ஏற்ப்பட்ட முன்னேற்றம் என்று முதல் சொன்ன செய்தியிருந்து பின்வாங்குகிறோம்.

இதுவே நம் முந்திய ஆய்வின் சிறுபிள்ளை தனத்தை உறுதிப்படுத்துகிறது. அதன் பின் இந்த இரண்டாவது ஆய்வின் நிலை என்னவாக இருக்கும்? இறைவன் மட்டுமே அறிந்தவன்.

ஆகவே, இறை சாபத்திற்கு ஆளாக்கும் இந்த தர்க்கம் / விவாததினை விட்டொழிப்போம்.

இன்ஷா அல்லாஹ் வர இருக்கிற ரமலானின் எந்த விசயத்திலும் விவாதம் செய்யாமல் அதை ஒரு அற்புத மாதமாக ஆக்கி, இறைவனின் சாபத்திலிருந்து தப்பிப்போம்.

தர்க்கத்திற்கு துணைபோகும் அத்துணை சாதனங்களையும், இயக்கங்களை விட்டு துரமாகுவோம் இறைவனுக்கும் நெருக்கமாக ஆகுவோம்.

நமக்கு தெரிந்த செய்திகளை இறைபொருத்ததிற்காக செய்வோம். தெரியாத செய்திகளை தெரிந்து கொள்ள முயற்ச்சிப்போம். ஆனால், வீண் தர்க்கத்திலிருந்து விடுபடுவோம். ஆமீன்

2 comments:

  1. Assalamu Alaikkum!

    Where is the Buhari Hadees Quoted No.? I can say lot of such Hadees without any Authentic way as this Article was written.
    This is the big mistake in our society when they start to write/comments against anything simply start and end without proof.

    Islam is not blind believe. First, we should understand what is Islam then we need to learn it proper ways as our Prophet Muhammed (peace be upon him) instructed. See this Article how start and how badly end.

    There is no need any debate if a single community/few persons are in the world/country. Why these debates are important and needed? Because of population are growing in this world/country. when population grows some group also will appears with some ideas because of their incomes, grades, positions, etc..


    Could you show me at least a single verse in Holy Quran which goes against Debate? the your quoted sentences clearly mentioned that do not go for unwanted debates. There isn't any verse in Quran or Hadees to avoid from Debate.

    Please start to comment before finalize reality and truth.

    May Allah show us always right path from blind ways.

    ReplyDelete
  2. KaalNadaikal pol intha kur aan meethu vilunthu vidaatheerkal..kur-aan ...ariyaathathai arinthavarkalidam Kelvi-kettu pin patrungal-Hadees..ini ik katurai patty mudi vedungkal

    ReplyDelete

Powered by Blogger.