கத்தார் நிலத்திற்கும், அதன் மக்களுக்கும் மழையை அருள பிரார்த்தனை
அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, இன்று (5) லுசைல் தொழுகை மைதானத்தில் திரளான மக்களுடன் இணைந்து 'இஸ்திஸ்கா' (மழை வேண்டி இறைஞ்சும்) தொழுகையை நிறைவேற்றினார். நபிகள் நாயகம் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி, இந்த நிலத்திற்கும் அதன் மக்களுக்கும் மழையை அருளுமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்தத் தொழுகையில் ஷூரா கவுன்சில் தலைவர் ஹசன் பின் அப்துல்லா அல்-கானிம், பல ஷேக்குகள், அமைச்சர்கள், ஷூரா கவுன்சில் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.
தொழுகையைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட உரையில், ஷேக் டாக்டர் யஹ்யா புட்டி அல்-நுஐமி, பணிவுடனும் மரியாதையுடனும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூடியிருந்த மக்களைக் கேட்டுக்கொண்டார்.



Post a Comment