12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த, பெண் கைது


12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த, வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது தலைமறைவாகியிருந்தார்.


ராகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிங்கெந்த பகுதியில் வைத்து  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ராகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவராவார்.

No comments

Powered by Blogger.