நாட்டில் இப்படியெல்லாம் நடக்குது


தென் மாகாணத்தின் கிராமமொன்றில், சொந்தத் தந்தைக்கு எதிராக மகன் பொலிஸில் அளித்த விசித்திரமான முறைப்பாடு தொடர்பான சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.


தந்தைக்கும் மகனுக்கும் இடையில் திருமணத்துக்குப் பின்னரே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மகனின் மனைவி வீட்டுக்கு வந்ததிலிருந்து, மாமனாரை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சித்து வந்துள்ளார். எனினும், வீடு தந்தையின் பெயரில் இருந்ததால் அவரை வெளியேற்ற முடியவில்லை.


இதனால், மருமகள் படிப்படியாக கணவருக்கும் அவரது தந்தைக்கும் இடையிலான உறவைச் சீர்குலைத்துள்ளார். இதன் விளைவாக, தந்தையும் மகனும் ஒருவரையொருவர் வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், அண்மையில் தந்தையைத் தேடி பொலிஸார் திடீரென வீட்டுக்கு வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, தனக்கு எதிராக முறைப்பாடு செய்தவர் யார் எனக் கேட்டுள்ளார்.


அப்போது, அவரது மகனே முறைப்பாடு செய்துள்ளதாகவும், தனது கோழிக் கூட்டிலிருந்து கோழியொன்றைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதைக் கேட்ட தந்தை கண்ணீர் மல்க, “ஐயா, அவன் எனது மகன்தான். யாரோ கோழியைத் திருடியிருக்கலாம். இது எனது மருமகளின் வேலையாகத்தான் இருக்கும். என்னைப் பற்றி பொய்யான முறைப்பாடுகளைச் செய்து வீட்டிலிருந்து வெளியேற்றவே அவள் முயற்சிக்கிறாள்” எனக் கூறியுள்ளார்.


தந்தையின் நிலைமையைக் கேட்ட பொலிஸ் அதிகாரியும் கவலையடைந்துள்ளார்.


“இப்போது எதுவும் செய்வதற்கில்லை. பிரச்சினையைப் பொலிஸ் நிலையத்துக்கு வந்து தீர்த்துக்கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டு அந்த அதிகாரி அங்கிருந்து சென்றுள்ளார்.

No comments

Powered by Blogger.