வெலிக்கடை சிறைச்சாலையில் 3 மாத குழந்தை உயிரிழப்பு


வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் மூன்று மாதப் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக விரிவான அறிக்கை ஒன்றைக் கோருவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.


இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துடன் தொடர்புடைய அவசியமான தலையீடுகளை மேற்கொள்வதற்கும், அநாதை நிலை அல்லது இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுப்பதைக் குறைத்துக் கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இலங்கை பெண்கள் பணியகத்திற்கும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்திற்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


 

No comments

Powered by Blogger.