அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரி, தேசிய மட்டத்தில் முதலிடம்


 தேசிய மட்டத்தில் முதலிடம் – அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி அதிகாரிகள் நேரில் பாராட்டு!


அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், சாதனை படைத்த மாணவர்களை நேரில் சந்தித்து அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அறபாத் முகைடீன் பாராட்டி கௌரவித்தார்.


இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர், வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க (SDEC) உறுப்பினர்கள் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த பலரும் கலந்துகொண்டு மாணவர்களின் வரலாற்றுச் சாதனைக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.


இதன் போது பாடசாலையின் அதிபர் ஸாஹீர் ஹூஸைன், பிரதி அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

No comments

Powered by Blogger.