ருவன்வெலிசாய அருகில் ஏற்பட்ட அமைதியின்மை 8 பேர் கைது, ராஜங்கனயே தேரர் வைத்தியசாலையில் சிகிச்சை


ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் இன்று (12.) ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்,  எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.


சம்பவத்தின் போது  ராஜங்கனயே சத்ததிஸ்ஸ தேரரின் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன; அவர் தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அனுராதபுரம் புனித பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்களை நிறுத்தவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரியும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான தேரர் குழுவினர் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். 

No comments

Powered by Blogger.