சந்திரிகாவின் தாராளம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளார்.
அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் வாழும் குடும்பம் ஒன்றுக்காக தனது சொந்த நிதிப் பங்களிப்புடன் அவர் இந்த வீட்டினை நிர்மாணித்து வருகின்றார்.
அதற்கமைய, வீட்டின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிட சந்திரிக்கா அம்மையார் சென்றிருந்தார். இதன்போது குறித்த வீட்டிலிருந்து உணவருந்தும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செயற்பாட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், மக்களுக்கு எங்களால் இயன்றளவு சேவை செய்வது எனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.


Post a Comment