காசாவில் உள்ள 50,000 மக்களுக்கு அவசரமாகக் கூடாரங்களை வழங்க உத்தரவு
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், காசாவில் உள்ள 50,000 மக்களுக்கு அவசரமாகக் கூடாரங்களை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
குளிர்காலப் புயல்கள், திடீர் வெள்ளத்தால் தற்காலிக முகாம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பதே இந்த உதவியின் நோக்கமாகும். காசா பகுதி முழுவதும் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு இந்த பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
இடம்பெயர்வு முகாம்களைச் சேதப்படுத்தி, ஆயிரக்கணக்கான கூடாரங்களை வெள்ளத்தில் மூழ்கடித்த கனமழையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழை தொடங்கிய முதல் சில மணி நேரங்களில் சுமார் 70,000 கூடாரங்கள் பாதிக்கப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment