ஞானசாரரை மீண்டும் துறவு பூணச்செய்ய நடவடிக்கை - 10 பேர் கொண்ட குழு தயார்
ஷியாம் மகாநிக்காயாவின் கோட்டைப் பீடத்தின் மகாநாயக்க தேரர் கலாநிதி இடப்பனை தம்மலங்கார தேரர், ஞானசார தேரர் மீண்டும் துறவு பூணுவதற்கான திகதியையும் நேரத்தையும் ஒழுங்குபடுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பௌத்த போதனைகள் மற்றும் ஒழுக்காற்று விதிகளுக்கு இணங்க குறித்த துறவு பூணும் சடங்கு நடத்தப்பட வேண்டும். இந்தச் சடங்கை எளிதாக்குவதற்கு ஏற்ற பொருத்தமான திகதியையும் நேரத்தையும் விரைவில் வழங்குமாறு அவர் சிறைச்சாலை திணைக்களத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தானும் உட்பட கோட்டைப் பீடத்தின் சங்க சபையின் 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு குறித்த நிகழ்வுக்காக சிறைச்சாலைக்கு வருகை தருவார்கள். இந்த வருகைக்கான அவசியமான ஏற்பாடுகளைச் செய்து, திட்டமிடப்பட்ட திகதியையும் நேரத்தையும் தனக்கு அறிவிக்குமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment