அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது விடயம்
தனமல்வில பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்ததால் வாக்குகள் சமநிலையில் முடிவடைந்தன.
இதனையடுத்து, தவிசாளரின் தீர்மானிக்கும் வாக்கைப் பயன்படுத்தி இந்த வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர் ஒருவர் ஆளும் தரப்பின் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Post a Comment