Header Ads



மகிந்தவின் உடல்நிலை மோசமான நிலையில்


 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள  மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாக பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (13) வைத்தியசாலைக்குச் சென்று, மகிந்தவை பார்வையிட்டு ஊடகங்களிடம் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மகிந்த ராஜபக்சவுக்கான அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.  மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் நிலவிய போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்தியர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.


இன்று அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 83 வயதாகின்றது. அவரை நேரில் சென்று பார்த்தபோது, அவர் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. அவர் விரைவில் குணமடைய நாம் பிரார்த்திக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.