Header Ads



ஒரே இலக்க தகடுகள் கொண்ட 2 முச்சக்கர வண்டிகள்


ஒரே இலக்க தகடுகள்  கொண்ட 2 முச்சக்கர வண்டிகளை நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.


குறித்த 2  முச்சக்கர வண்டிகளும் நுவரெலியாவின் ராகலை மற்றும் சாந்திபுரப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் 2 முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைதான இருவரும் உறவினர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் ஒன்று, வாடகைக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் மற்றொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.