குழந்தைகளை தேர்வுகளுக்கு மட்டும் தயார்படுத்துவதோடு அரசாங்கத்தின் இலக்கு முடிந்துவிடுவதில்லை
இந்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம், அறிவும் திறன்களும் நற்பண்புகளும் நிறைந்த முழுமையான குடிமக்களை நாட்டிற்கு வழங்குவதாகும்.
குழந்தைகளை தேர்வுகளுக்கு மட்டும் தயார்படுத்துவதோடு அரசாங்கத்தின் இலக்கு முடிந்துவிடுவதில்லை. சமுதாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் தங்களது அறிவை நடைமுறைரீதியாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்காக புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பாடசாலை உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், 2027ஆம் ஆண்டில் கல்வி உருமாற்றத்திற்காக கணிசமான முதலீட்டை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Post a Comment