நான் கடத்தப்பட்டேன்...


1989 ஒக்டோபர் 12ஆம் திகதி எந்தவொரு சட்டபூர்வமான முறைப்பாடும் இன்றி, நீதிமன்றத்தின் சட்டபூர்வமான பிடியாணையுமின்றி காசல் வீதியில் வைத்து நான் கடத்தப்பட்டேன். அதன் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீடத்தைச் சேர்ந்த பலருடன் நானும் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டேன். மூன்று மாதங்களாக எங்களது கண்கள் கட்டப்பட்டிருந்தன. இதனால் எனது கண்பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகப் பரீட்சைகளில் தோற்றுவதற்காக 1990ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே எங்களை விடுவித்தனர். இது பிறர் கூறிய தகவல் அல்ல எனது சொந்த வாழ்க்கை அனுபவம்.


எமக்கு ஏற்பட்ட துயரங்கள் இன்றைய இளைஞர்களுக்கும் ஏற்படக்கூடாது. குறிப்பாக, புதிய தலைமுறையினரான 'ஜென் சி', 'ஜென் அல்பா' இத்தகைய நிலைக்கு ஆளாகக்கூடாது. மக்களின் துயரங்களையும் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரக்கூடாது


அரசாங்கம் முதலில் கடந்தகாலக் கொலைகள், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும். ஜனநாயக வழியில் நடைபெறும் வேலைநிறுத்தங்களையும் பல்கலைக்கழகப் போராட்டங்களையும் அடக்குமுறையால் எதிர்கொண்டால், அது மேலும் மோதல்களுக்கு வழிவகுக்கும். அரசாங்கம் ஜனநாயக வரம்புகளுக்குள் செயற்பட்டால் மக்களிடமிருந்தும் ஜனநாயக ரீதியான பதில் கிடைக்கும். அதற்கு மாறாகச் செயற்பட்டால் எதிர்வினைகளும் உருவாகும்.


பாட்டலி சம்பிக்க ரணவக்க

No comments

Powered by Blogger.