JDM நிறுவனத்தின் அனுசரணையுடன் புத்தளம் தள வைத்தியசாலைக்கு சுமார் 35 கட்டில் மெத்தைகள்
மக்களின் நலன் மற்றும் சமூக சேவைகளை முன்னிறுத்தி, JDM நிறுவனத்தின் அனுசரணையுடன், அதன் உரிமையாளர் அல்ஹாஜ் நியாஸ் புத்தளம் தள வைத்தியசாலைக்கு சுமார் 35 கட்டில் மெத்தைகள் அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு 2026 ஒக்டோபர் 22ஆம் திகதி நடைபெற்றது.
வைத்தியசாலையின் 7ஆம் இலக்க வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்நன்கொடை, சமூக நலனில் அக்கறை கொண்ட மனிதநேயப் பணியாக அமைந்துள்ளது.
இந்நன்கொடையானது புத்தளத்தின் சமூக சேவையாளரும், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருபவருமான அல்ஹாஜ் முஜீபுர் ஹாஜியார் அவர்களூடாக, புத்தளம் தள வைத்தியசாலையின் உயரதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி, உப தலைவர் அஷ்ஷேக் ரியாஸ் தேவ்பந்தி, புத்தளம் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் சலீம் சேர், நந்தா அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் அஜ்மல், உறுப்பினர் சகோதரர் ஹஸீபுல்லாஹ் மற்றும் சிட்டி பாய்ஸ் அமைப்பின் தலைவர் சகோதரர் பயாஸ் ஆகியோர் கலந்துகொண்டு, இச்சமூகப் பணிக்குத் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
அல்லாஹ் தஆலா இந்நற்கருமத்தை ஏற்றுக்கொண்டு, JDM நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினருக்கும், அல்ஹாஜ் முஜீபுர் ஹாஜியார் அவர்களுக்கும் நீடித்த ஆரோக்கியத்தையும், பரக்கத் நிறைந்த பொருளாதாரத்தையும், மேலும் பல சமூக நலப் பணிகளை முன்னெடுப்பதற்கான ஆற்றலையும் வாய்ப்புகளையும் அருள்வானாக! ஆமீன்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் நகரக் கிளை

Post a Comment