Header Ads



பிக்குகளுக்கு வசதிகளை வழங்கிய பள்ளிவாசலுக்கு சஜித் பாராட்டு


விகாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலை சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்து, பிக்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமய நல்லிணக்கத்திற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாமல் தடுக்கவும் ஜனாதிபதி அனுரகுமாரவை  வலியுறுத்தினார்.


போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு சுகாதார வசதிகளை வழங்கிய தெவட்டஹாக பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சஜித்  நன்றி தெரிவித்ததோடு, இந்தச் செயலை சமய நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் வர்ணித்தார். 


இருப்பினும் இலங்கை பொலிஸார்   அதிகாரிகளுடனான ஒரு மோதலின் போது பலங்கொட கசப்ப தேரோ ஒரு கான்கிரீட் படியில் வழுக்கி விழுந்ததாகவும், அவர் தாக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.