நாமலின் செயலாளரின் வீட்டிலிருந்து பாதுகாப்பு பெட்டகம் மீட்பு, பாஸ்ட்வேர்ட் தெரியாதாம்
நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரின் கல்கிஸையிலுள்ள வீட்டில், இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (விசேட சோதனையொன்றை மேற்கொண்டு அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகம் (Safe) ஒன்றை மீட்டெடுத்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய, கல்கிஸ்ஸ, டெம்ப்ளர்ஸ் மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர் சஞ்சய சமரசிங்க என்பவர். இவர்நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றி வருகிறார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸாரின் உதவியுடன் வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள், சுமார் 4 மணிநேரம் தீவிர சோதனையில் ஈடுபட்ட பின்னரே வீட்டிலிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இருப்பினும், குறித்த பாதுகாப்பு பெட்டகத்தை திறப்பதற்கான கடவுச்சொல் தன்னிடம் இல்லை என வீட்டின் உரிமையாளரான சஞ்சய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment