ஞானசாரர் விடயத்தில் அரசாங்கம் மாட்டிக் கொண்டுள்ளது


தற்போதைய அரசாங்கம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்வதில் புத்திசாலித்தனமாகவும் அரசியல் முதிர்ச்சியுடனும் செயல்பட வேண்டும் என்று ஸ்ரீ சமந்தபத்ர தேரர் தெரிவித்துள்ளார்.


ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்குமாறு தாங்கள் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்த போதிலும், அரசாங்கம் அதைச் செய்யத் தவறி அகங்காரத்துடன் நடந்துகொண்டதால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.


 "ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று தாங்கள் கடுமையாகப் போராடியபோதே இந்த விவகாரத்திற்குத் தீர்வு கண்டிருந்தால் பிரச்சினை அங்கேயே முடிந்திருக்கும், அரசாங்கத்தின் இந்த அலட்சியப்போக்கே இப்போது இதை ஒரு தீவிர போராட்டமாக மாற்றியுள்ளது.


விஹாரமகா தேவி பூங்காவில் போராட்டம் நடந்தபோது, அரசாங்கமே அதற்கு எதிராக மற்றொரு போராட்டத்தை நடத்தியது அதன் பயத்தையும் பலவீனத்தையுமே காட்டுகிறது. 

No comments

Powered by Blogger.