50 நாட்கள் மட்டுமல்ல, 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார்


சிறை வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.


திறைசேரியில் பணம் இருப்பதாகக் கூறப்பட்டபோதிலும், மக்களுக்கு எந்தவித பொருளாதார நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும், நாட்டின் பொருளாதாரச் சவால்களைக் கையாள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.


அத்துடன் தனது தந்தை மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டின் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுதந்திரமாக வாழும் உரிமையை வழங்கியவர். நாட்டின் பிரச்சினைகளின் சுமையை ஒரு குடும்பத்தின் பின்னால் மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் தம்மை விடுவிக்கும் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சிறைச் சுவர்களுக்கு அப்பால் தமக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும், தம்மை சிறையில் அடைத்தாலும் மக்களது எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் சிறைபிடிக்க முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.