கொழும்பில் உள்ள நேபாள தூதரக காணிக்கு நிகழ்ந்த அவலம்


கொழும்பில் தூதரகம் அமைப்பதற்காக 32 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு, அரசாங்கத்தின் அனுமதியின்றி தனியார் நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட காணியை மீண்டும் கைப்பற்றுவதற்கு நேபாள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


முன்னதாக, தூதரகம் அமைப்பதற்காக கொழும்பு - ராஜகிரிய பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 1989 மே 18 அன்று 360,000 அமெரிக்க டொலர்களுக்கு நேபாள அரசாங்கம் கொள்வனவு செய்தது.


இந்த காணியில் 1 ஏக்கர் நிலப்பரப்பு, இலங்கைகான நேபாளத்தின் முன்னாள் தூதர் அல்பெர்ட் எதிரிசிங்க என்பவரால் அரசாங்க அனுமதி ஏதுமின்றி 1990 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் இருமுறை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


30 வருடங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து நேபாள வெளிவிவகார அமைச்சு, இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.