நேர்த்தியாக நெய்யப்பட்ட ஆகாயத்தின் மீது சத்தியமாக..! அல்குர்ஆன்: 51:7
நமது காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் (Observable Universe) மாத்திரம் ஏறத்தாழ 100 பில்லியனுக்கும் அதிகமான (நமது பால்வெளி மண்டலத்தைப் போன்ற) பிரம்மாண்டமான விண்மீன் மண்டலங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அந்த ஒவ்வொரு விண்மீன் மண்டலத்திற்குள்ளும் ஏறத்தாழ 100 பில்லியனுக்கும் 400 பில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் (நமது சூரியக் குடும்பத்தைப் போன்ற) நட்சத்திரக் குடும்பங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்தப் பிரம்மாண்டமான எண்ணிக்கையை விஞ்ஞானிகள் கணினி வடிவமைப்பின் மூலம் உருவகப்படுத்த முயற்சித்தபோது, இந்த எண்ணற்ற விண்மீன் மண்டலங்கள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு, சிலந்தி வலைகளைப் போன்று அழகுறப் பின்னப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அதில் இருக்கும் (நமது பால்வெளி மண்டலத்தைப் போன்ற) ஒவ்வொரு விண்மீன் மண்டலமும், குளிரான மழைக்கால இரவில் பின்னப்பட்ட நூல்களில் சிக்கிய நீர்த்துளிகளைப் போலக் காட்சியளிப்பதை அவதானித்துள்ளனர்.
ஆகாயத்தின் உருவாக்கம் பற்றிய வான்மறை வசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது:
((நேர்த்தியாக நெய்யப்பட்ட ஆகாயத்தின் மீது சத்தியமாக!))
அல்குர்ஆன்: 51:7
தமிழாக்கம் / Imran Farook

Post a Comment