அந்த நிலைமைக்கு ஜனாதிபதி ஒருபோதும் செல்லமாட்டார்


அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி நீதித்துறையை ஆக்கிரமிப்பதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சியினர், தற்போது நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு ஞானசாரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அழுத்தம் பிரயோகிக்கின்றனர் என்று  பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.


இன்று நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். எதிர்க்கட்சியினரைப் போல் எம்மால் நீதித்துறையைத் எமது தேவைக்கேற்பப் பயன்படுத்த முடியாது


"முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொருளாதாரப் படுகொலையாளியாகவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பை மீறிய குற்றவாளியாகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறிய குற்றவாளியாகவும் உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறானதொரு நிலைக்குத் தற்போதைய ஜனாதிபதி ஒருபோதும் செல்லமாட்டார் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்" என்றும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.