Header Ads



சிங்கள இனத்தை பாதுகாக்க, ஞானசாரரை ஜனாதிபதி மன்னிக்க வேண்டும்


சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை திருத்திக் கொண்டு  ஞானசாருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சிங்கள இனத்துக்கும், பௌத்த மதத்துக்கும் எதிராகவே செயற்படுகிறது. ஞானசார தேரரின் காவியுடை களைக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிங்கள பௌத்த மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.


ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் ஏதேனும் சிக்கல் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்து ஜனாதிபதி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். பௌத்தத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அது பாரதூரமான விளைவுகளை இந்த நாட்டில் ஏற்படுத்தும்.

No comments

Powered by Blogger.