ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார் என எங்களிடம் கூறினார்கள்..
'அமைச்சர் லால் காந்த ஞானசார பிக்குவின் விடுதலை தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிக்குகளின் - கோரிக்கையை ஜனாதிபதியால் நிறைவேற்ற முடியாது. ஜனாதிபதி அதைச் செய்ய மாட்டார். இந்த அரசாங்கம் அதற்கு உடன்படாது. இது செய்யக்கூடிய காரியமல்ல.'என குறிப்பிட்டுள்ளார். நேற்றைய 3வது சந்திப்பின் போது, செயலகத்திற்கு அருகில் வந்து எங்களிடம் கூறினார்கள்,
'34வது பிரிவின்படி ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார்' என்று. ஆனால் கால அவகாசம் பற்றி அவர்கள் கூறவில்லை. அப்படியென்றால், இன்றைய நிலவரப்படி மகாசங்கத்தினரை ஏமாற்றியுள்ளனர். அதாவது, மகா சங்கத்தினரை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால், நாட்டின் குடிமகனுக்கு என்ன நடக்கும் என சந்திக்க வேண்டும்.
இவர்களால் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை. 3வது சந்திப்பின் போது கூறுகிறார்கள், 'ஜனாதிபதி குறுகிய காலத்தில் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவார், தனக்குக் கிடைத்துள்ள அதிகாரங்களின்படி' என்று. 6வது ஜனாதிபதி தரப்பிலிருந்து பொதுமன்னிப்பு வழங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செயல்முறையில் தான் தவறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, 7வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 8வது ஜனாதிபதி ரணில் மற்றும் 9வது ஜனாதிபதியான அநுர குமார ஜனாதிபதி இப்போது அந்த ஆணையைச் சரிசெய்ய வேண்டும்.
நீதிமன்றம் குறித்த மன்னிப்பு வழங்கும் செயல்முறை தவறு என்பதால் அதனை நீக்கியுள்ளது. புதிதாக இப்போது மன்னிப்பு வழங்க வேண்டுமெனில் ஒரு ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பை மற்றொரு ஜனாதிபதிதான் 34வது பிரிவின் கீழ் வழங்க வேண்டும்.
எனவே, எங்களிடம் வழங்குவதாக கூறி போகச் சொன்னார்கள். பின்னர் கால அவகாசம் பற்றிக் கேட்டபோது, காலத்தை மட்டும் கூறவில்லை. அதனால் எமது காசப்ப பிக்கு விடிய விடிய அங்கேயே காத்திருந்தார். இல்லையெனில், அப்போதே நாங்கள் அங்கிருந்து புறப்படத் தீர்மானித்திருந்தோம்.
22 ஐக் கொண்டுவருவதற்கும் அதிக காலம் எடுக்கவில்லையே. சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவில்லையே. நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம். மகாநாயக்க தேரர்களை நீங்கள் மதிக்கவில்லையா? அஸ்கிரிய மகாநாயக்க தேரர் கூறுகிறார், மக்கள் கொந்தளித்துள்ளனர் மன்னிப்பு வழங்குங்கள் . வயது முதிர்ந்த பிக்குகளும் இளம் துறவிகளும் வந்திருந்தனர்.
அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறோம். புத்த சாசனம் பாதுகாக்கப்படவில்லை என்றால், இன்று நம்மில் யாருக்கும் இந்தக் கலாசாரத்தின் கீழ் முக்தி அடைய முடியாது.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment