ராபியா ஷெரினுக்காக திரண்ட மக்கள்
ராபியா ஷெரின் தற்போது அரியவகை SEVERE APLASTIC ANAEMIA - SAA எனும் இரத்தசோகை நோய் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அப்லாஸ்டிக் இரத்த சோகை என்பது, உடலிலுள்ள எலும்பு மஜ்ஜையால் போதுமான இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இயலாத வகையிலான அபூர்வ வகை நோய்களில் ஒன்று.
SAA நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே இதற்கான ஓரளவு தீர்வு என்று மருத்துவ உலகம் தெரிவிக்கிறது.
அதுவும் பத்து லட்சம் பேரில் ஒருவரிடம் மட்டுமே பொருத்தமான ஸ்டெம் செல் கிடைக்க வாய்ப்புள்ளது.
ராபியா ஷெரின் அபூர்வ வகை நோய் பாதிப்பில் சிகிச்சை பெற்று வருவதும் அவருக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனும் விபரம் வெளிவந்ததும், அவருக்காக DKMS எனும் மருத்துவ தொண்டு நிறுவனம் உலகளாவிய அளவில் ஸ்டெம் செல் தானத்திற்காக முயற்சி செய்து வரும் தகவல்கள் வெளியானது.
மலப்புறம் மாவட்டம் அரீக்கோடு சுல்லமுசலாம் அறிவியல் கல்லூரி நிர்வாகம் தங்கள் கல்லூரி முன்னாள் மாணவி ராபியா ஷெரினுக்காக ஸ்டெம் செல் சேகரிப்பு இயக்கம் நடத்த முன்வந்தது.
அக்டோபர் 8ம் தேதி கல்லூரியில் வைத்து முகாம் நடத்தும் விபரம் சமூக ஊடகங்களும், இணைய சேனல்களும் இடைவிடாது வைத்த கோரிக்கையை ஏற்று 8ம் தேதி காலை முதல் ஜாதி, மதம், வயது வித்தியாசம் பாராமல் ஆண்கள், பெண்கள் கல்லூரி மாணவர்கள் நீண்ட வரிசையில் வந்து குவிந்ததை பார்த்து முகாம் ஏற்பாட்டாளர்கள் திகைத்தனர்.
ஸ்டெம் செல் சேகரிப்பின் முதல் கட்டமாக தானம் செய்ய விரும்புபவர் தங்கள் வாயின் உட்பகுதியில் ஸ்வாப் வகையிலான Cotton Buds உதவியில் அழுத்தி பிடிப்பதன் மூலம் செல்கள் சேகரிக்கப்பட்டு உரிய முறையில் பதிவு செய்து மருத்துவ சோதனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
8ம் தேதி 6125 பேர் தாங்களாகவே விரும்பி ஸ்டெம் செல் தானம் செய்ய முன்வந்து சாம்பிள் வழங்கியதும், சாம்பிள் சேகரிக்கும் medical kit தட்டுப்பாடு காரணமாக மறுநாளும் முகாம் நடத்தும் நிலை ஏற்பட்டது.
மீண்டும் மறுநாள் காலை அதேபோன்று தானம் செய்ய சாரை சாரையாக வந்து ஸ்டெம் செல் சாம்பிள் வழங்கியவர் எண்ணிக்கை 4133 பேர் ஆனது. உலகத்திலேயே ஒரு நோயாளிக்காக ஸ்டெம் செல் தானம் செய்ய 10258 பேர் முன்வந்தனர் என்பதே ஆச்சர்யமானது.
இந்த பத்தாயிரம் பேரில் எவராவது ஒருவரின் ஸ்டெம் செல் சாம்பிள் ராபியா ஷெரின் இரத்த அணுக்களுடன் பொருந்தி அவர் பூரண நலம்பெற இறைவன் அருள் புரிவானாக...
Colachel Azheem


Post a Comment