கெக்குணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்பு


"கல்வி வசதிபடைத்த சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படக் கூடாது. ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை, அவர் பிறந்த குடும்பத்தின் பொருளாதார நிலையோ அவர் வாழும் பிரதேசமோ தீர்மானிக்கக் கூடாது; அவரது முயற்சியும் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளுமே தீர்மானிக்க வேண்டும். அதற்கமைய, 2027ஆம் ஆண்டில் 2ஆம் தரத்திற்கும் 6ஆம் தரத்திற்கும் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 


பாட அறிவு, கற்பித்தல் முறைகள், ஆசிரியர் பயிற்சி, பௌதிக மற்றும் தொழில்நுட்ப வளங்கள் உள்ளிட்ட கல்வியின் ஐந்து முக்கிய தூண்களையும் வலுப்படுத்தி, நகர்ப்புறப் பாடசாலைகளுக்கும் கிராமப்புறப் பாடசாலைகளுக்கும் இடையிலான வசதி இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்."


ஒக்டோபர் 29ஆம் திகதி குருநாகல், கெக்குணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பிரதமர் இப்படி குறிப்பிட்டுள்ளார். 




No comments

Powered by Blogger.