அகதியாக சென்றவர் புனித குர்ஆன் மீது கைவைத்து பிரிட்டன் Mp ஆகினார்
நாடாளுமன்றத்தின் கீழ் சபையான 'ஹவுஸ் ஆஃப் காமன்ஸில்' ஹோல்பார்ன் மற்றும் சென்ட் பன்கிராஸ் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், திருக்குர்ஆன் மீது கைவைத்து பதவியேற்றார். முன்னாள் பிரதமர் கெயர் ஸ்டார்மர் விலகியதைத் தொடர்ந்து லண்டனில் நடந்த இடைத்தேர்தலில், 42 வயதான அப்தி-வாலி கடந்த வாரம் வெற்றி பெற்றிருந்தார்.
சிறு வயதில் அகதியாகத்தான் அப்தி-வாலி பிரிட்டனுக்கு வந்தார். லண்டனில் உள்ள கேம்டன் பகுதியில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த அவர், உள்ளாட்சி மன்றத் தலைவராகும் முன்பு தொண்டு நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் வேலை செய்துள்ளார்.
ஒரு சாதாரண அகதியாக வந்து, நாட்டின் உயமட்டப் பதவிகளில் ஒன்றிற்கு அவர் உயர்ந்தது பிரிட்டனில் வாழும் சோமாலியர்களுக்கும் பிற ஆப்பிரிக்க மக்களுக்கும் மிகப்பெரிய பெருமிதத்தைத் தந்துள்ளது.
இந்தத் தேர்தலில் 45 சதவீத வாக்குகளைப் பெற்று அப்தி-வாலி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பசுமைக் கட்சித் தலைவர் சாக் போலான்ஸ்கி 33 சதவீத வாக்குகளைப் பெற்றார். மேலும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 7 சதவீத வாக்குகளும், குடியேற்றத்திற்கு எதிரான ரிபார்ம் கட்சிக்கு 6 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்குவதற்கும், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முன்னுரிமை அளிப்பதாக வெற்றியின் பின் பேசிய அவர் கூறினார். ஸ்டார்மருக்குப் பின் பிரதமராக வந்துள்ள ஆண்டி பர்ன்ஹாம், அப்தி-வாலிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Post a Comment