13 நாடுகளில் தலைமறைவாகவுள்ள 112 112 குற்றவாளிகள்
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகள் 13 நாடுகளில் தலைமறைவாக உள்ளமை கண்டறியப்பட்டு, அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் உதவி காவல்துறை அத்தியாட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேற்படி அடையாளம் காணப்பட்டுள்ள நபர்களை 2027 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு அழைத்து வர முடியும். அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் போதைப்பொருள் கடத்தல் மூலமே சட்டவிரோதமாகப் பணத்தைச் சம்பாதித்துள்ளனர்.

Post a Comment