Header Ads



எதேச்சதிகார அரசாங்கமாகவே இந்த NPP காணப்படுகின்றது.


மாறுபட்ட அரசாங்கமே இன்று நாட்டை ஆட்சி செய்து வருகின்றது. சர்வாதிகார, எதேச்சதிகார அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் காணப்படுகின்றது. அவ்வாறே ஜனநாயகத்தை மரணப் படுக்கைக்கு கொண்டு செல்லும் அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் திகழ்ந்து வருகின்றது. தற்சமயம் இந்த அரசாங்கம் பிரஜைகளின் பங்களிப்பைக் குறைக்கும் தேசியத் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து, ஜனநாயகத்துக்கான வெளியைச் சுருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


இதன் ஆரம்பம் இளைஞர் மன்ற தேர்தல் ஊடாக நடந்து, பின்னர் சிவில் பாதுகாப்பு குழுக்கள் வரை சென்றன. அதன் தொடரில் தற்போது 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, ஜனநாயக பாரம்பரியங்கள் அனைத்தையும் நாசமாக்கி, தனிவழியில் எல்லா விடயங்களையும் செய்து கொள்வதற்கு இந்த அரசாங்கம் முற்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஹம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை தேர்தல் தொகுதி, லுனுகம்வெஹர புதிய நகரில் இன்று (05) இடம்பெற்ற விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும்  மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.