Header Ads



ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்துமாறு வீரசேகர கோரிக்கை


இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு ஒப்பந்தத்தையும் இரகசியமாக மேற்கொள்ளாது, அதன் முழுமையான விவரங்களை நாடாளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.


38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பில் மாணவர் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்புத் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.


நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து உடன்படிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.