Header Ads



தொலைபேசி, சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளர்களுக்கும்


தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளர்களுக்கும்  அடையாளம் காண்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்த தங்களது  புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது. 


நாட்டிலுள்ள சட்டவிரோதச் செயல்பாடுகளுக்குச் சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.  நாட்டில் சுமார் 3 கோடி சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 


இதன் காரணமாகச் சிம் அட்டைகள் தொடர்பாக ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக (TRCSL)   பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.