கொடூரமாக வேட்டையாடிய ராஜபக்சர்கள்
யுத்தக் களத்தில் எதிரியாக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் கூடக் கடைப்பிடித்த எல்லைகளை மீறி, தன்னையும் தமக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளையும் அவர்களது குடும்பங்களையும் கொடூரமாக வேட்டையாடிப் ராஜபக்சர்கள் பழிவாங்கி, தனக்கெதிராக செயற்பட்டனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
நாங்கள்புலிகள் அமைப்புக்கு எதிராக 3 வருடங்கள் கொடூரமான முறையில் யுத்தம் செய்தோம். அவர்களின் தாக்குதல்களில் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், அந்தப் போர்க் காலத்தில்கூட பிரபாகரன், தங்களது குடும்பங்களையோ, எங்களது பிள்ளைகளையோ பழிவாங்கவில்லை.
மேலும், ஜனவரி 2008 இல், போரின் வியூகத்தை மாற்றி இராணுவத்தை வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நேரடியாக நகரச் சொன்னதன் மூலம், மகிந்த, கோட்டாபய மற்றும் கருணாகொட ஆகியோர் இராணுவ நடவடிக்கைகளை குழப்பவும், தனது வேகத்தைக் குறைக்கவும் முயன்றனர்” என கூறியுள்ளார்.

Post a Comment