Header Ads



விமானத்தில் வரும்போது சேதமடைந்த ஈட்டிகள்


இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் சேதமடைந்த 5 ஈட்டிகளுக்குப் பதிலாக புதிய ஈட்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.


இன்று (15)  இலங்கைக்கு வருகை தந்தபோது, விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட ருமேஷ் தரங்கவுக்குச் சொந்தமான 5 ஈட்டிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. தான் 92 மீற்றருக்கும் அதிகமான தூரத்தை எறிந்து சாதனை படைத்த ஈட்டிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக ருமேஷ் தரங்க தெரிவித்துள்ளார்.


சேதமடைந்த ஈட்டிகளின் மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாயுக்கும் அதிகம் என அவரது தந்தை தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ருமேஷ் தரங்க முறைப்பாடு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.