நீதிமன்றத்திற்கு செல்லும்போது மயக்கம் போட்ட ஞானசாரர்
ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்த நிலையில் திடீரென மயக்கம் ஏற்பட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை, புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பெரேரா அன்ட் சன்ஸ் உணவகத்தில் உணவு உட்கொண்டு கொண்டிருந்த போது மயக்கநிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வாவிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மாதம் 01ஆம் திகதி அழைக்கப்படுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment