இலங்கை கடற்படையின் மனிதாபிமானம்
இலங்கை கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையில் ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு தெற்கே செப்டம்பர் 22 ஆம் திகதி கவிழ்ந்த 'KM கருடா ஜெயா VI' என்ற இந்தோனேசிய மீன்பிடிப் படகில் இந்த பணியாளர்கள் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பகுதிக்கு உட்பட்ட கடற்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதன்படி, கடற்படையினரால் மீட்கப்பட்ட 25 பேரையும் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்து, மனிதாபிமான உதவிகளை வழங்கியதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகத்திடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment