ஆசிய நாடுகளின் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை, இலங்கையிலேயே மிக அதிகம்
உயர் கல்வித் தகுதிகளைக் கொண்ட ஆசிய நாடுகளின் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் இலங்கையிலேயே மிக அதிகளவில் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அந்தப் பெறுமதி 43 சதவீதமாகும்.
13 வருட பாடசாலைக் காலத்தையும், அதனைத் தொடர்ந்த உயர் கல்வியையும் வெற்றிகரமாக நிறைவு செய்யும் நாட்டின் கற்றறிந்த, புத்திஜீவி மாணவர் சமூகத்தின் அடுத்த எதிர்பார்ப்பு, தமது வேலைவாய்ப்புக் கனவை நனவாக்கிக்கொள்வதாகும்.
எனினும், நாட்டில் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வது சோகமான நிலையாகும்.
அவ்வறிக்கையின்படி, உயர் கல்வித் தகுதிகளைப் பெற்ற 15 முதல் 24 வயதிற்கு இடைப்பட்ட இலங்கை இளைஞர் யுவதிகளின் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 43 சதவீதமாக உள்ளது. ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை இதில் மிக உயர்ந்த சதவீதத்தில் உள்ளது.

Post a Comment