Header Ads



2 சமூகங்களுக்கும் சில விடயங்களை கூற விரும்புகின்றேன்...


2  சமூகங்களுக்கும் சில விடயங்களை கூற விரும்புகின்றேன். இங்கு இரு தரப்பும் ஒருவருக்கொருவர் வார்த்தை மோதலில் ஈடுபட்டமையே இன்று எங்களை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுருக்கின்றது. 


இன்று அனோஜனுக்காக நாம் குரல் கொடுப்பது அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ஏற்க்கொள்ள முடியாதவொன்று அந்தக் குடும்பத்த்தின் வலி பெரியது.  ஆனால் பிழைகள எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை நாம் ஆராய வேண்டும் எம்மை செம்மைப்படுத்த வேண்டும். இந்த 2 நாட்களாக நான் எத்தனை தூரம் பயணித்தேன் எத்தனை சிரமங்களைத் தாண்டியிருக்கின்றேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.


நேற்று நான் அனோஜன் வீட்டு வாசலில் இருந்து வெளியேறும் போது கண்ட காட்சியே இவை. மாற்றுத்திறனாளியான தம்பி மொஹமட் அவர்கள் தன் இயலுமையைத் தாண்டி தன் தாயுடன் வருகை தந்து அனோஜன் விடுதலை பெற வேண்டும் எண்டு வீடியோவில் உரையாற்றினார். 


அவரை அனோஜனின் தாயார் கட்டியணைத்தார்.  யார் முஸ்லிம், யார் தமிழ் என்பதல்ல யார் மனிதர்கள் என்பதே இன்று முக்கியமாக இருக்கின்றது. மதங்கள் அன்பைத் தவிர எதையும் கூறவில்லை. 


இயன்றவரை அதை கடைப்பிடித்தாலே போதுமானது.  இன்றைய நாள் போல் சென்ற வருடம் மார்ச் மாதம் ருஸ்தி எனும் இளைஞனின் கைதின் போது அவரின் தாயை சந்தித்து அவரது தடுப்பாணையை வெளியிட்டு அவரது விடுதலையை உறுதி செய்தேன். 


எனக்கு சமூக வேறுபாடு கிடையாது. சிலர் எவளவு குத்தி முறிந்தாலும் என்னை இரு சமூகங்களில் இருந்தும் பிரிக்க முடியாது.  ஒரு தாயின் கண்ணீருக்கு இரங்காத மனங்கள் இருக்கவே கூடாது. மேலும் சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் உங்களுக்கான பொறுப்பை உணர்ந்து செயற்படுங்கள். 


- Rajkumar Rajeevkanth - 

No comments

Powered by Blogger.