ஷிரந்தி கைது செய்யப்படுவாரா..?
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச சிரிலிய சவிய கணக்கிற்கு தலைமை தாங்குகின்றார்.
கணக்கிற்கு வந்த நிதி, கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே வரவு வைக்கப்பட்டுள்ளது. CT ஸ்கேனுக்காக நிதி திரட்டப்பட்ட போதிலும், ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது, சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைத்த ஸ்கேன் இயந்திரம் என்பது தெரியவந்துள்ளமையே இந்த விசாரணைக்கான அடிப்படை காரணமாகும்.
தற்போது ஷிராந்தி ராஜபக்ச சுகயீனமுற்றுள்ள மருத்துவமனையில் இருப்பதால் இது தொடர்பான நிலைமைகள் குறித்த விசாரணைகள் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த கணக்கு தொடர்பாக கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவு அவரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment