நாமலுக்கு அவரது மாமனார், வழங்கியுள்ள நற்சான்றிதழ்
ராஜபக்ச மற்றும் லிமினி ஆகியோர் தமது 2 பிள்ளைகளுடன் கொழும்பு நெக்ரிஸ் வீதியில் அமைந்துள்ள எனது வீட்டில் மேல்மாடியிலே வசித்து வருவதாக பிரபல தொழிலதிபரும் (LSR) குழுமத்தின் தலைவரும், லிமினியின் தந்தையுமான திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாமலின் குடும்பத்தின் அனைத்து பராமரிப்புச் செலவுகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து அன்றாடச் செலவுகளையும் தனது சொந்தப் பணத்திலிருந்தே செலவிடுவதாகவும் நாமலின் பணம் எதுவும் பெற்றுக் கொள்வதில்லை.
நாமல் ராஜபக்ச வீட்டிற்கு வந்ததும் மிகவும் எளிமையான குடும்ப வாழ்க்கையையே வாழ்கிறார் ராஜபக்சக்களை மக்கள் திருடர்கள் என்று சொல்கிறார்கள். லிமினியின் தந்தையும் ஒரு திருடன். அப்படியானால் லிமினிக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது என பல கதைகள் கூறப்பட்டாலும் நான் அவ்வாறான எந்த சம்பவத்திற்கு சம்பந்தமில்லை.
மேலும் நாமலை எனக்கு இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். அவர் அசைவம் சாப்பிடாத, மது அருந்தாத ஒரு நல்ல பிள்ளை என குறிப்பிட்டுள்ளார். See less

Post a Comment