Header Ads



மெலிந்து போன முன்னாள் அமைச்சர்


ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


கடந்த 2013ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சட்டவிரோதமான முறையில் வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 128,520 ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்

No comments

Powered by Blogger.