Header Ads



மற்றுமொரு மோசடி அம்பலம்


மொனராகலை குளம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் ராஜபக்சர்களின் புதையல் தேடும் நடவடிக்கை உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அதுகுறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத்  தெரிவித்துள்ளார்.


குளத்தை புனரமைப்பதற்காக, அதன் அணைக்கட்டு 2020 மே மாதத்தில் உடைக்கப்பட்டது. குளத்தின் புனரமைப்பு பணிகளுக்காக ஆரம்பத்தில் 82.2 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும் பின்னர் அது 167.26 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது.


அரசாங்கம் இதுவரை இத்திட்டத்திற்காக 70.5 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது. அறிக்கைகளின்படி, குளத்தின் புனரமைப்புப் பணிகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


எனினும் ஆய்வின்படி, இதுவரை செலவிடப்பட்டுள்ள 70.5 மில்லியன் ரூபாய்க்கு இணையான எந்தவொரு பணியும் அங்கு நடைபெறவில்லை. புதையல் தேடும் மோசடியை மறைப்பதற்காகவே இந்த புனரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அது குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதி அமைச்சர்  கோரிக்கை விடுத்தார். 

No comments

Powered by Blogger.