இலங்கையர்களினால் கிடைக்கும் மில்லியன் மில்லியன் டொலர்கள்
வௌிநாட்டு தொழிலாளர்களினால் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் இலங்கைக்கு 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சியைக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்திருந்தது.
ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டில் வசிக்கும் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்துள்ள மொத்தப் பணப் பரிமாற்றத் தொகை 6,131 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.

Post a Comment